கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த பெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவர் தான் மீனாட்சி சவுத்ரி.
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் இவர் பெரும்பாலும் நடித்துள்ளார். ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்த பிரபலமான நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது சினிமாவுக்குள் நுழைந்து கலக்கி கொண்டிருக்கிறார்.
தமிழில் இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்.
தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான நிலையில் இதில் ஜீவனின் காதலியாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள இவருக்கு அடுத்ததாக இன்னும் சில தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தெலுங்கில் இவர் விஸ்வம்பர, மெக்கானிக் ராக்கி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார்.
இதனிடையே இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது ரசிகர்களை மயக்கும் கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…