விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட்டாக சென்று கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ‘ஈரமான ரோஜாவே 2’. இந்த சீரியல் தற்பொழுது டிஆர்பியிலும் முன்னிலையில் உள்ளது. இந்த சீரியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு தற்போது சீரியல் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் வில்லி மாமியாராக நடித்து வருபவர் தான் நடிகை மீனா வேமுரி.
இவர் தற்பொழுது மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டு வருகிறார். அதற்கு காரணம் இவரது கதாபாத்திரமே. இவர் தனது மருமகளான காவியாவை திட்டுவதால் மக்கள் இவரை வெறுத்து வருகின்றனர். இவரை சைலன்டான வில்லி என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இவர் கேரளாவை சேர்ந்தவர் என்றும் இன்னொரு புறம் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவர் சரளமாக தமிழ் பேசக் கூடியவர்.
நடிகை மீனா வேமுரிக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதைத்தொடர்ந்து சினிமாவின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பட வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு டிமான்டிக் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகை மீனா ‘நந்தினி’ சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார்.
தற்பொழுது இவர் நிறைய தொடர்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டு வருகிறார். இதை தொடர்ந்து இவருக்கு ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது இவர் இந்த சீரியலில் வில்லி மாமியாராக கலக்கிக் கொண்டு வருகிறார். சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் இவர் செம மாடர்ன் ஆனவர். தற்பொழுது இவர் மாடர்ன் உடையில் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…