Categories: சினிமா

தேவர்மகன்ல நடிச்சது மீனாதான்.. அந்தப் பாட்டே அவர்களுக்கு எழுதுனது தான்.. அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் கேரியரில் மறக்க முடியாத திரைப்படம் என்றால் அது தேவர்மகன் திரைப்படம் தான். சினிமா படிப்பவர்களுக்கு அந்த திரைப்படம் ஒரு விக்கிபீடியாவாக திகழ்ந்து வருவதாக இயக்குனர் மிஷ்கின் பல பேட்டிகளில் கூறியுள்ளார். கமல்ஹாசனின் ஸ்கிரீன் ப்ளே, பரதனின் இயக்கம், இளையராஜாவின் இசை என படத்தில் அனைத்துமே சிறப்பாக அமைந்திருந்ததால் தேவர்மகன் காலம் கடந்த இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு மாஸ்டர் படமாக உள்ளது. தேவர் மகன் படத்தின் கதையை கமல்ஹாசன் வெறும் ஏழு நாட்களில் எழுதி முடித்து விட்டாராம்.

கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 34 ஆண்டுகள் கழித்தும் இன்றளவும் ஒரு விவாத பொருளாக உள்ளது. தேவர் மகன் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக கௌதமி மற்றும் ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். இதில் ரேவதி நடித்த பஞ்சவர்ணம் கதாபாத்திரம் இன்றளவும் அவருக்கு ஒரு மைல்கல் கேரக்டராக அமைந்திருக்கிறது. குறிப்பாக கமல்ஹாசனுடன் அவர் ரொமான்ஸ் செய்யும் இஞ்சி இடுப்பழகி பாடல் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

 

ஆனால் இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது ரேவதி இல்லையாம். அதாவது அந்த கேரக்டரில் முதலில் நடிக்க நடிகை மீனா தான் கமிட்டாகி உள்ளார். அவரை வைத்து நான்கு நாட்கள் படபிடிப்போம் நடந்துள்ளது. ஆனால் அவருக்கு அந்த கிராமத்து பெண் கதாபாத்திரம் செட் ஆகாததாலும் அவர் மிகவும் இளமையாக காட்சியளித்ததாலும் அவர் செட்டாக மாட்டார் என முடிவெடுத்த பட குழு, அவருக்கு பதில் நடிகைய ரேவதியை நடிக்க வைத்துள்ளனர். குறிப்பாக இஞ்சி இடுப்பழகி என்ற பாடலும் மீனாவுக்காக தான் எழுதப்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் நாசர் ஒரு நிகழ்ச்சியில் கூட பேசி இருந்தார்.

Nanthini

Recent Posts

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

30 seconds ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

4 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

9 minutes ago

மீண்டும் அதிர்ச்சி..! ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில்… ஷாக் கொடுத்த ஈரான்… பற்றி எரியும் ஹர்மூஸ்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…

14 minutes ago

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

21 minutes ago

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய  அறிவிப்பை…

33 minutes ago