தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக மாறியவர் நடிகை மீனா. ரஜினி, அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் நடிப்பின் உச்சத்தில் இருக்கும் பொழுதே வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.
தனது குடும்ப வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த மீனாவின் வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது. கொரோனா காலகட்டத்தில் அவரது கணவர் வித்தியாசாகர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது கணவரின் உயிரிழப்பால் மிகப்பெரும் துயரத்தை அடைந்தார் நடிகை மீனா.
தற்பொழுது தான் இவர் மெல்ல மெல்ல தனது கணவரின் மரணத்திலிருந்து மீண்டு வந்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து நடிகை மீனா தற்பொழுது சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து இவருக்கு’ மீனா 40′ என்ற விழா கூட சமீபத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து நடிகை மீனா வெள்ளித்திரையிலும் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை மீனா தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர் பாட்டு பாடி அசத்திய வீடியோ தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ…
சென்னை அயனாவரத்தில் தனியாக வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவரிடம், அதே வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்ணும் அவரது…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை குழுவின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் நாளை வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிராகத் தமிழக அரசு கடும் நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது. ஜனவரி 5-ஆம்…
கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் தேர்தல்களை…
கடலூர் மாவட்டம் வேப்பூரில் நாளை நடைபெறவுள்ள தேமுதிகவின் 'மக்கள் உரிமை மீட்பு மாநாட்டிற்கான' பிரம்மாண்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.…
இத்தாலியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் சேர்ந்த ஜோதி என்ற இந்தியப் பெண், அங்குள்ள பணிச் சூழல் குறித்துப் பகிர்ந்துள்ள…