‘வாவ் கேட்கவே எவ்ளோ இனிமையா இருக்கு’… சூப்பர் சிங்கரில் பாட்டு பாடி அசத்திய நடிகை மீனா… வைரலாகும் வீடியோ…

By Begam on ஆவணி 13, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக மாறியவர் நடிகை மீனா.  ரஜினி, அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் நடிப்பின் உச்சத்தில் இருக்கும் பொழுதே வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.

   

தனது குடும்ப வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த மீனாவின் வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது. கொரோனா காலகட்டத்தில் அவரது கணவர் வித்தியாசாகர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது கணவரின் உயிரிழப்பால் மிகப்பெரும் துயரத்தை அடைந்தார் நடிகை மீனா.

   

 

தற்பொழுது தான் இவர் மெல்ல மெல்ல தனது கணவரின் மரணத்திலிருந்து மீண்டு வந்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து நடிகை மீனா தற்பொழுது சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.  இதைத்தொடர்ந்து இவருக்கு’ மீனா 40′ என்ற விழா கூட சமீபத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து நடிகை மீனா வெள்ளித்திரையிலும் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை மீனா தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர் பாட்டு பாடி அசத்திய வீடியோ தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)