Categories: CINEMA

மீண்டும் ஹீரோயினாக களமிறங்கும் நடிகை மீனா… அடடே ஹீரோ இவரா?… படம் தூள் தான் போங்க…

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக மாறியவர் நடிகை மீனா.  ரஜினி, அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் நடிப்பின் உச்சத்தில் இருக்கும் பொழுதே வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.

தனது குடும்ப வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த மீனாவின் வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது. கொரோனா காலகட்டத்தில் அவரது கணவர் வித்தியாசாகர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது கணவரின் உயிரிழப்பால் மிகப்பெரும் துயரத்தை அடைந்தார் நடிகை மீனா.

தற்பொழுது தான் இவர் மெல்ல மெல்ல தனது கணவரின் மரணத்திலிருந்து மீண்டு வந்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து நடிகை மீனா தற்பொழுது சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு சில விளம்பர படங்களில் நடிக்கும்  வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியானது . இதைத்தொடர்ந்து இவருக்கு’ மீனா 40′ என்ற விழா கூட சமீபத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை மீனாவை மீண்டும் ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் ராமராஜன் ஏற்கனவே சாமானியன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் .அடுத்து உத்தமன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க தான் மீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

ஏ ஆர் ரஹ்மானின் ஒரு பாட்டுக்கு ஹாலிவுட்டில் ஒரு கோடி ரூபாய் ராயல்டி வாங்கிய மணிரத்னம்.. என்ன பாட்டு தெரியுமா?

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ராயல்டி பற்றிய பஞ்சாயத்து பரவலாக விவாதமாகியுள்ளது. இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி பற்றி நீதிமன்றத்தில் வழக்கு…

1 hour ago

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

14 hours ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

16 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

18 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

19 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

20 hours ago