தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர்தான் மீனா. ரஜினி, கமல், சரத்குமார், சத்யராஜ் மற்றும் அஜித் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். சினிமாவில் பிஸியாக வந்த மீனா ஒரு கட்டத்தில் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் உள்ளார். அவர் விஜயுடன் இணைந்து தெறி திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார். இதனிடையே கொரோனா காலகட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் உயிரிழந்து விட்டார். அவருடைய உயிரிழப்பு மீனாவை பெரிதும் பாதித்தது.
தன் கணவரின் இறப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்த மீனா தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மீனாவின் இரண்டாவது திருமணம் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் பரவி வருகிறது. குறிப்பாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்ததை தொடர்ந்து அவருக்கும் மீனாவுக்கும் திருமணம் நடக்க போவதாக செய்திகள் பரவியது. ஆனால் இந்த வதந்திகளுக்கு எதுவும் பதில் சொல்லாமல் மீனா அமைதியாகவே இருந்து வந்தார்.
இந்நிலையில் மீனா முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார். அதில், எனது திருமணத்தில் சிலர் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. எப்போதும் எனது திருமணத்தை மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றனர். நான் எனது மகளுடன் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கின்றேன். மீண்டும் திருமணம் செய்து கொள்வதற்கான எந்த திட்டமும் என்னிடம் இல்லை. எந்த ஹீரோ விவாகரத்து செய்தாலும் அதை என் திருமணத்துடன் இணைத்து பேசுகின்றனர். அந்த நடிகருடன் இரண்டாவது திருமணம் என்கின்றனர். அதில் எந்த உண்மையும் கிடையாது. நான் நடிப்புக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறேன் என்று மீனா தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…