‘அசுரன்’ பட நடிகையா இது?… செம கெத்தா பைக் ஓட்டுறாங்களே… வைரலாகும் புகைப்படம்…

By Begam on ஆனி 12, 2023

Spread the love

மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியார். இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் ரிலீசான ‘துணிவு’ திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.

   

இவர் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘அசுரன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

   

 

இதைத்தொடர்ந்து தற்பொழுது அவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். துணிவு திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பும் கிடைத்து வருகிறது.

நடிகை மஞ்சு வாரியர் 1998ல்  மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மீனாட்சி எனும் ஒரு மகளும் உள்ளார்.

பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் 2015ல் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். நடிகை மஞ்சு வாரியார் தனது மகளுடன் தற்பொழுது தனித்து வாழ்ந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை மஞ்சு வாரியார். இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில்  பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்பொழுது தான் பைக் ரைட் செல்லும் புகைப்படங்களை இணையத்தில் பகிர, அது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.