நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் இவன் வேற மாதிரி இந்த திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கையாக நடித்தவர் நடிகை மாளவிகா மேனன். இதனைத் தொடர்ந்து மாளவிகா மேனன் விழா, பிரம்மன், வெத்துவேட்டு, நிஜமா நிழலா, பேய் மாமா, அருவா சண்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.
சமீபத்தில் மாளவிகா மேனன் அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த 2011-ஆம் ஆண்டு நான் சினிமாவில் அறிமுகம் ஆனேன். ஆனால் எனக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நல்ல பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் சில தவறுகள் செய்தேன். அதாவது கதை கேட்கும் போது எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாதது போல எனக்கு தோன்றும். அந்த திரைக்கதை குறித்தும் எனக்கு சரியான புரிதல் இல்லை.
அப்படி நிறைய படங்களை நான் தவிர விட்டேன். அந்த படங்கள் வெளியான பிறகு பார்த்தால் எனக்கு கூறப்பட்ட அந்த கதாபாத்திரம் சிறப்பாக அமைந்திருக்கும். அந்த படத்தை தவற விட்டு விட்டோமே என அதன் பிறகு வருத்தப்பட்டு இருக்கிறேன். நீண்ட நாட்கள் செல்ல, செல்ல இப்போது திரைக்கதை பற்றி புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் நான் செய்த தவறை இனிமேல் செய்ய மாட்டேன். அந்த தவறை இப்போது சரி செய்து கொண்டேன். இதனை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…