விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. இத்தொடரின் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக தற்போது இவர் மைனா நந்தினி இன்று பிரபலமாக அறியப்பட்டு வருகிறார். தனது தனிப்பட்ட நகைச்சுவைத் திறன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் களம் இறங்கி கால் பதித்து கலக்கி வருகிறார். அந்த வகையில் ரோமியோ ஜூலியட், நம்ம வீட்டு பிள்ளை போன்ற திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைனா நந்தினிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து முதல் கணவர் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து பிரபல சீரியல் நடிகரான லோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை மைனா நந்தினி.
இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். தற்பொழுது இவர் தனது கணவருடன் இணைந்து ரொமான்ஸ் செய்யும் அழகிய வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்ய, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…