Categories: சினிமா

பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்கும் ரோஜா பட நடிகை… செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Spread the love

90S களில் மிகவும் பிரபலமான நடிகைகளின் ஒருவராக வலம் வந்தவர் நடிகை  மதுபாலா.’ஒத்தயாள் பட்டாளத்தில்’  என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து கே. பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘அழகன்’என்ற  திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.1992 ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ படத்தில் கதாநாயகியாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.இப்படத்தில் அரவிந்த்  சிவசாமிக்கு மனைவியாக மதுபாலா நடித்துள்ளார். இவர்  பல முன்னணி நடிகர்ககளுக்கு  ஜோடியாக  நடித்துள்ளார்.

#image_title

இதைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தில் கதாநாயகியாக  நடித்திருந்தார் .இவர்  தமிழில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு கன்னடம் போன்ற மொழி  படங்களில் நடித்துள்ளார்.இவர் அதிகமான இந்தி திரைப்பட நடிகையாக வலம் வந்துள்ளார். இவர்  மிகப பிரபலமான நடிகர்களான  அசோக் குமார், தேவ் ஆனந்த், மோகன்லால், மம்முட்டி, அக்க்ஷய் குமார், ரிஷி கபூர்,ஜீதேந்திரா, நசிருத்தீன் ஷா, அர்ஜூன், ஜாக்கி செராஃப், கோவிந்தா, அஜய் தேவ்கான், சைய்ஃப் அலி கான், நானா படேகர் எனப் பலருடன் நடித்துள்ளார்.

நடிகை மதுபாலா ஆனந்த் ஷா   என்பவரை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதன்பின்னர் சினிமாவில் நடிக்கவில்லை. இவர் 2010 முதல் 11 வரை ஜெயா டிவியில்  ஒளிபரப்பான செளந்தர வள்ளி என்ற சீரியல் மூலமாக ரீ என்ட்ரி  கொடுத்தார். இந்நிலையில் மலையாள சினிமாவில் கம் பேக் கொடுக்கிறார்.

#image_title

அதாவது மதுபாலா மீண்டும் மலையாள சினிமாவில் இந்திரன்ஸுடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். புரொடக்‌ஷன் நம்பர் 1 படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் உள்ள அசி காட் கோயிலில் இன்று தொடங்குகிறது. வர்ஷா வாசுதேவ் இயக்க, அபிஜித் பாபுஜி தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Soundarya

Recent Posts

BREAKING: பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு… காலையிலேயே ஷாக் நியூஸ்…!

பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

7 minutes ago

“மேடையிலேயே கண்கலங்கிய எடப்பாடியார்”… கையெடுத்து கும்பிட்டு சொன்ன அந்த ஒரு வார்த்தை… அதிர்ந்த எடப்பாடி தொகுதி…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…

11 minutes ago

“உங்களுக்கு அனுமதியில்லை” ட்ரம்பை வெளியே நிறுத்திய ராணுவம்… அதிரடி ஆப்பரேஷனில் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்..? கசிந்த ரகசியத் தகவல்கள்..!!

ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…

11 minutes ago

“விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி”.. திருச்சியில் ‘திக் திக்’ நிமிடங்கள்… தந்தி டிவி வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்… கலக்கத்தில் தொண்டர்கள்,,,!

தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…

20 minutes ago

“முயல் பிடித்துத் தருவதாக ஆசை வார்த்தை”… 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… வேலூரில் நடந்த பகீர் சம்பவம்…!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ…

24 minutes ago