#image_title
வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் கேரளாவை சேர்ந்தவர். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகளான இவர், மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் விஜய் ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் தனுஷ் ஜோடியாக ‘மாறன்’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மாளவிகா ஒரு ஹிந்தி படங்களிலும் மற்றும் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் தங்கலான் என்கிற பிரம்மாண்ட திரைப்படம் தயாராகி உள்ளது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ஆதிவாசி பெண்ணாக நடித்துள்ளார் மாளவிகா.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமுகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மாளவிகா மோஹனன். இவர் தற்பொழுது தனது ரசிகர்களுடன் இணைந்திருக்க, தனது எக்ஸ் பக்கத்தில் #AskMalavika என்ற தலைப்பில் அவர்களோடு உரையாடினார். அப்பொழுது ரசிகர் ஒருவர் “எப்பொழுது நீங்கள் கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டு, நடிக்க போகிறீர்கள்” என்று சர்ச்சையான கேள்வி ஒன்றை கேட்டார்.
அதற்கு “நான் நிறுத்த மாட்டேன், அதில் உங்களுக்கு ஏதேனும் கஷ்டம் இருக்கிறதா? என்று மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல மற்றொரு நெட்டிசன் ‘அக்கா எப்போ ஆக்டிங் கிளாஸ் போக போறீங்க?’ என்று கிண்டலாக கேள்வி கேட்க, ‘நீங்களும் ஏதோ ஒரு வகையில் எனக்கு பொருத்தமான நபராக மாறி, இந்த கேள்வியை கேட்கும் பொழுது நான் நடிப்பு பள்ளிக்கு செல்வேன்’ என்று பதில் அளித்துள்ளார். இந்த பதிவுகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயற்கையில் நீர்வாழ் பறவைகள் மீன் பிடிக்கும் விதம் எப்போதும் ஆச்சரியமானது. அந்த வகையில், நீர் காகம் ஒன்று ஒரு பெரிய…
நாசிக் நகரில் இயங்கி வந்த தனியார் பயிற்சி மையத்தில், மாணவி ஒருவர் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…
குஜராத் மாநிலம் சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த முதியவர் ஒருவரை குறிவைத்து கொடூரமான…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்க பாமக…
தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் உரிமையாளர் ஆர்.பி. சௌத்ரி, நடிகர் விஜய்யின் ஆரம்பகால வளர்சியில்…
பீகாரின் தலைநகரான பாட்னாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், ஜெஹானாபாத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சர்மா என்ற இளைஞர் சந்தேகத்திற்கிடமான…