Categories: சினிமா

தங்கத் தாலிக்கு பதில் கழுத்தில் மஞ்சள் கயிறு இருக்க இதுதான் காரணம்.. கீர்த்தி சுரேஷ் கொடுத்த விளக்கம்..!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருடைய நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான ரகு தாத்தா திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் பாலிவுட்டில் முதல் முதலாக என்று கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ் வருண் தவானுடன் இணைந்து பேபி ஜான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அட்லி இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படத்தின் ரீமேக் தான் பேபி ஜான் திரைப்படம். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில வாரங்களாக பேபி ஜான் திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக கீர்த்தி சுரேஷ் ஈடுபட்டு வருகின்றார். திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்து இருப்பதை ரசிகர்கள் பார்த்தனர். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் மஞ்சள் கயிறு அணிந்து இருப்பது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மஞ்சள் கயிறை நாங்கள் அகற்றக் கூடாது என்பதால் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நான் மஞ்சள் கயிறு அணிந்து இருப்பதற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை மஞ்சள் கயிறை அகற்றக் கூடாது. அதன் பிறகு தான் மஞ்சள் கயிறை மாற்றி தங்கச் சங்கிலியாக மாற்றுவோம். ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் ஒரு நல்ல நாள் இருந்திருந்தால் நான் தங்கச் சங்கிலியை மாற்றி அணிந்திருப்பேன் என நினைக்கிறேன். ஆனால் தற்போது நாங்கள் ஒரு நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த நல்ல நாள் ஜனவரி மாதம் இறுதியில் தான் வருகிறது.

அதுவரை நான் மஞ்சள் கயிறு அடைந்திருப்பேன். யாரோ ஒருவர் என்னிடம் சொன்னார், நீங்கள் அதை உங்கள் விளம்பர ஆடைகளுடன் அணிய விரும்பவில்லை என்றால், அது இங்கே கட்டப்பட்டதற்கு காரணம் அது உங்கள் மார்பை தொட வேண்டும் என்பதற்காகவும் இது புனிதமானது மற்றும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது, நீங்கள் அதை கோல்டன் செயினுக்கு மாற்றினால் அது சாதாரணமாக இருக்கும். உள்ளே கூட வைக்கலாம் என்று சிலர் சொன்னார்கள். நான் அதை தற்போது வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

7 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

7 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

7 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

7 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

7 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

8 மணத்தியாலங்கள் ago