தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2013ல் வெளியான ‘கீதாஞ்சலி’ என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகர் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்பொழுது விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளிவந்த மிஸ் இந்தியா, பெண் குயின்,சாவித்ரி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.தற்பொழுது கோலிவுட் மற்றும் ஹாலிவுட் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் ‘மாமன்னன்’ திரைப்படம் இறுதியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதே போல ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘சைரன்’ திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார்.
இதை தொடர்ந்து தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் என்பதே நம் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. நடிகை கீர்த்திக்கு ரேவதி எனும் ஒரு அக்கா உள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் தற்பொழுது 10 வருடங்களை சினிமாவில் கதாநாயகியாக கடந்திருக்கிறார். சினிமாவில் 10 வருடங்களை தொட்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் எமோஷனலான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், ” அவரது அப்பா அம்மா ஆகியோருக்கு நன்றி கூறி, இத்தனை வருடங்கள் ஆதரவளித்த மக்களுக்கும் நன்றி கூறியிருக்கிறார். மேலும் அவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் பிரியதர்ஷன் தான் அவரின் குரு எனவும் கூறியுள்ளார்.
குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த அண்ணனைத் தொழில் தொடங்குமாறு கூறிய தம்பி, வாக்குவாதம் முற்றி அவரை அடித்துக் கொன்ற…
மதுபோதையில் நிலைகுலைந்த பெண் ஒருவர் நடுரோட்டில் கடுமையான ரகளையில் ஈடுபட்டு அப்பகுதியையே ஸ்தம்பிக்க வைத்தார். அவ்வழியே சென்ற பொதுமக்களை வலுக்கட்டாயமாகத்…
உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த எட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர்…
தாக்கூர்கஞ்ச் நியூ ஹைதர்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள சில்வர் சிட்டி காலனியில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த தம்பதியினரை கடுமையாகத்…
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் அருகேயுள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் வெடித்தது. அங்கிருந்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 65 வயதான சுகிராம் கேவத் என்பவர், புனிதம் வாய்ந்த கயா தலத்திற்குச் சென்று…