சென்னையில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி, அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சோகமான நிகழ்வு குறித்து நடிகை கஸ்தூரி தனது கண்டனத்தையும் வேதனையையும் பதிவு செய்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய நடிகை கஸ்தூரி, பாதுகாப்பான நகரமாக இருந்த சென்னை தற்போது பெண்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாக மாறிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் இழப்பை ஈடுசெய்ய முடியாது எனக் கூறிய அவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நோக்கி, “இதுதான் உங்கள் ஆட்சியின் சட்ட ஒழுங்கு நிலவரமா?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகாரைச் சேர்ந்த கௌரவ் குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் அவர்களது 2 வயது மகன் பிர்மணி குமார் ஆகியோர் தரமணி பகுதியில் வசித்து வந்தனர். கடந்த ஜனவரி 25-ம் தேதி, அவர்கள் தங்கியிருந்த இடத்திலேயே அதே மாநிலத்தைச் சேர்ந்த சில நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். மது போதையில் இருந்த ஒரு கும்பல், முனிதா குமாரியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, அதைத் தடுத்த கௌரவ் குமார் இரும்புக் கம்பிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சாட்சியங்களை மறைக்க அவரது மனைவி மற்றும் குழந்தையும் கொல்லப்பட்டனர். இந்தக் கொலை தொடர்பாகப் பீகாரைச் சேர்ந்த 5 நபர்களைச் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாறு மற்றும் பெருங்குடி குப்பைக் கிடங்கு போன்ற வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…