Categories: சினிமா

விரைவில் சந்திரமுகி(கங்கனா ரனாவத்)க்கு டும் டும் டும்… அந்த அதிர்ஷ்டசாலி இவர் தானாம்…

Spread the love

நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வரும் திரையுலகில் வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் அதிகம் பெண்களை மையப்படுத்திய எடுக்க எடுக்கப்படும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கங்கனா. இவர் நான்கு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஐந்து ஃபிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். அதோடு ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 100 பிரபலங்கள் பட்டியலில் ஆறு முறை இடம்பெற்றுள்ளார் .

2020 ஆம் ஆண்டில் , இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதை இந்திய அரசாங்கம் அவருக்கு வழங்கியது. ஆனால் அடிக்கடி சர்சைக்குரிய கருத்துக்களை கூறி வம்பிழுக்கும் இவர் வரலாற்று படங்களில் நடிப்பதற்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பி இருந்தது.பாலிவுட் நடிகையான இவர், அவ்வப்போது நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையான கருத்தை கூறுவது வழக்கமான ஒன்று தான். சமந்தாவின் விவாகரத்து விஷயத்தில் கூட, அமீர் கான் தான் காரணம் என கூறி பரபரப்பை கிளப்பி இருந்தார்.

பாஜகவின் தீவிர ஆதரவாளரான இவர் சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிப்பது போல் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதாவது “1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு கொடுக்கப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை என்றும், 2014 ஆம் ஆண்டுதான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது. என்றும் கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து அவர் தமிழ், கன்னடம், இந்தியை விட சமஸ்கிருதம் பழமையானது என்றும், சமஸ்கிருதத்திலிருந்து இம்மொழிகள் உருவாக்கியிருக்கலாம், எனவே நம் நாட்டின் தேசிய மொழியான சமஸ்கிருதம் தான் என்பது போல பேசி விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தமிழில் சந்திரமுகி 2 திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்களை மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வருட இறுதியில் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறும் எனவும் இந்தி மீடியாவில் தகவல்கள் வைரலாகி வருகிறது. இத்தகவல் குறித்து இதுவரை கங்கனா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Begam

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

3 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

3 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

4 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

4 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago