தமிழ் சினிமாவில் தனது பெயரை யாராலும் மறக்க முடியாத அளவில் தனது அற்புத நடிப்பால் வித்தியாசமான கதாபாத்திரங்களால் பல்வேறு சம்பவங்களை நிகழ்த்திய மந்திரகாரியாக இருந்து வருபவர் தான் நடிகை ஜோதிகா. ஜோதிகாவின் குடும்பம் கலை குடும்பமாகவே இருந்துள்ளது. பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடித்த நிலையில் அதன் பிறகு இருவரும் காதல் வலையில் சிக்கி கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதேசமயம் தற்போது தன் குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். கணவர் சூர்யா மற்றும் குழந்தைகள் என அனைவரும் தற்போது மும்பையில் தான் வசித்து வருகின்றனர். ஜோதிகா தற்போது ஹிந்தி பட வாய்ப்புகள் மூலம் மீண்டும் பிஸியான நடிகையாக மாற திட்டமிட்டுள்ளார். தற்போது மோகன்லால் நடிப்பில் துடரும் என்ற படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் முதலில் இந்த திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்த ஜோதிகாவை தான் அனுப்பியுள்ளார் இயக்குனர் தருண். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சேர்ந்து தான் படத்தின் கதையை கேட்டுள்ளனர். ஆனால் இயக்குனர் கேட்ட தேதிகளில் தான் உலக சுற்றுலா செல்ல இருப்பதாக கூறி அவர் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். அதன் பிறகு தான் நடிகை சோபனாவை இயக்குனர் அணுகி கதை சொல்ல அவரும் உடனே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…