மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்திய அளவில் இரும்பு மனுஷி என்று பல அரசியல் தலைவர்களால் போற்றப்பட்டவர். அரசியல் என்பதையும் தாண்டி அவருடைய இளமை காலங்களை திரும்பிப் பார்த்தால் ஜெயலலிதா ஒரு சிறந்த நடிகை என்று தான் சொல்ல வேண்டும். தன்னுடைய 15 வது வயதிலேயே சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்து விட்டார். ஜெயலலிதா அரசியலுக்குள் வந்தது எப்படி என்றால் தனக்கு விருப்பமில்லாமல் நடந்த ஒன்று என்றுதான் சொல்வார். அதனைப் போலத்தான் அவர் சினிமாவுக்குள் வந்ததும். நன்றாக படிக்கக்கூடிய மாணவி படிப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய தாய் நடிகை சந்தியாவின் வற்புறுத்தலால் சினிமாவுக்குள் வந்தவர் தான் ஜெயலலிதா.
மிகவும் சிறு வயதிலேயே சினிமாவுக்கு வந்ததால் பெரும்பாலும் அவருடன் ஜோடி சேர்ந்த அத்தனை நடிகர்களும் அவரை விட வயதில் மூத்தவர்களாக தான் இருந்தனர். 1965 ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை என்ற திரைப்படம் மூலமாகத்தான் ஜெயலலிதா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த ஆண்டு அவருக்கு சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த ஜெயலலிதா தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி மக்களின் பெயர் ஆதரவையும் பெற்றார். ஜெயலலிதாவின் வாழ்நாள் முழுவதும் போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது என்று தான் கூற வேண்டும். அவர் அரசியல் பிரவேசம் எடுத்த பிறகு அவருக்கு நேராக நின்று பேச அமைச்சர்களும் அஞ்சினார்கள்.
இப்படி அரசியலையும் தமிழ் சினிமாவையும் ஆட்டி படைத்த ஜெயலலிதாவிற்கு ரசிகர் ஒருவர் காதல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நான் உங்கள் மேல் உயிரையே வைத்திருக்கின்றேன், நான் திருமணம் செய்தால் உங்களை தான் செய்வேன் என்று எழுதி இருந்தார். மேலும் ஒரு தேதியை குறிப்பிட்டு இந்த தேதிக்குள் என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று குறிப்பிட்டு இருந்தார். ரசிகரின் அந்த கடிதத்திற்கு ஜெயலலிதா எந்த பதிலும் எழுதவில்லை. அதன் பிறகு சில நாட்கள் கழித்து அதே ரசிகரிடம் இருந்து மீண்டும் ஒரு கடிதம் வந்துள்ளது.
அதில் மற்றொரு தேதியை குறிப்பிட்டு இருந்த ரசிகர் அந்த தேதிக்குள் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதற்கும் பதில் கடிதம் எழுதாத ஜெயலலிதா இறுதியாக அந்த ரசிகரியிடம் இருந்து வந்த கடிதத்திற்கு பதில் எழுதியுள்ளார். அதில், எனக்கு கணவராக வர விரும்புபவர் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுபவராக இருக்க வேண்டும். நீங்கள் முந்தைய கடிதங்களில் எழுதிய வார்த்தைகளைப் போல கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. கொடுத்த வாக்கை காப்பாற்றுவது என்பது மிக முக்கியம். ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்றாத உங்களை நான் எப்படி திருமணம் செய்து கொள்வேன் என்று அவர் பாணியிலேயே ஜெயலலிதா அவருக்கு பதில் கடிதம் எழுதினார்.
சிறப்பு லட்சுமி பூஜை செய்தால் கோடி கோடியாகப் பணம் கிடைக்கும் என ஆசை காட்டி, ஏழைக் குடும்பத்து இளம்பெண்களைப் பாலியல்…
தமிழக அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நவீன சைக்கிள்களை வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ஹீரோ…
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சத்யா மீது அக்கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலர் பாலியல்…
சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கஸ்தூரி, கணவரைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து…
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உள்ள கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள…
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…