திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றெடுத்த ‘நண்பன்’ பட நடிகை… முதன்முறையாக வெளியிட்ட குழந்தையின் புகைப்படம்…

By Begam on ஆவணி 6, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் ‘கேடி’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. இப்படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்றவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பாலிவுட் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தார். ஒரு பாடலுக்கு கோடிகளில் சம்பளம் வாங்கினார். இவரை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் விஜயின் நண்பன் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார் .

   

இந்த படத்தில் வரும் ஒரு பாடலில் தனது இடையழகை முழுவதுமாய் காட்டி தமிழ் ரசிகர்களை கட்டி போட்டார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவரை காண முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் மட்டும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை இலியானா. இவர் அவ்வப்பொழுது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

   

 

அப்படி சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்.ஆனால் இதுவரையிலும் தனது காதலர் யார் என்று கூறவில்லை. இதைத்தொடர்ந்து சமீபத்தில் இவர் தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து தனது காதலரை அறிமுகப்படுத்தினார்.

தற்பொழுது நிறைமாத கர்ப்பிணியான நடிகை இலியானா ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எங்கள் அன்பான மகனை இந்த உலகிற்கு வரவேற்பதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம் என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது என்று கூறி தங்களது மகனின் பெயர் Koa phoenix Dolan என்று தெரிவித்துள்ளார். தற்போது ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)