பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை ஹனிரோஸின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் இருந்து விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு நடிகைகள் தமிழ் சினிமாவில் நுழைந்து நடித்து வருகின்றனர். அவர்களின் நயன்தாரா உட்பட பல நடிகைகள் உச்சத்திற்கும் சென்றுள்ளனர். ஆனால் ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்கள் உண்டு. இவர்களைப் போல மலையாள திரை உலகில் இருந்து தமிழில் கால் பதித்தவர் தான் நடிகை ஹனி ரோஸ்.

இவர் சிங்கம் புலி, முதல் கனவே, மல்லுக்கட்டு மற்றும் கந்தர்வன் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் பெண் பத்திரிகையாளராக நடித்து அசத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் தற்பொழுது நடித்து வருகின்றார்.

இப்பொழுது தெலுங்கில் ‘வீரசிம்ம ரெட்டி’ படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடித்து தற்போது ஆந்திராவில் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஹனி ரோஸ். இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்கு என்றே ரசிகர்கள் கூட்டம் தனியாக உள்ளது. தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

