Categories: சினிமா

உடல் எடை பற்றிய கேள்வி….! புதிய அறிக்கை வெளியிட்ட நடிகை கௌரி கிஷன்…. வைரலாகும் இன்ஸ்டா பதிவு….!!

Spread the love

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் ’96’ பட நடிகை கௌரி கிஷன் நடித்த ‘அதர்ஸ்’ திரைப்படம் நாளை வெளியாகிறது. கடந்த 30-ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில், பாடல் காட்சியில் நடிகையைத் தூக்கியதை குறிப்பிட்டு நடிகையின் உடல் எடை  குறித்து கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதை ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கௌரி கிஷன் விமர்சித்து, இது போன்ற முட்டாள்தனமான கேள்விகள் சரியல்ல என்று கூறினார்.

சமீபத்தில்  நடந்த மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் இரு யூடியூபர்கள் கௌரி கிஷனை குறிவைத்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதிலளித்த கௌரி கிஷன், உடல் எடை குறித்த கேள்வி உருவக் கேலிக்கு சமம் என்றும், கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் எடை தொடர்பான கேள்வி என்பதால் நான் விமர்சித்தேன் என்றும் அமைதியாக விளக்கினார்.

கௌரி கிஷனின் தைரியமான பதில் இணையத்தில் பெரும் பாராட்டைப் பெற்றது. பல நடிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு ஆதரவாக கருத்து கூறியது. இந்தச் சம்பவம் குறித்து கௌரி கிஷன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், “வார தொடக்கத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் எனக்கும் ஒரு யூடியூபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பதட்டமானது. ஒருவரின் உடல் அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கருத்துகள் அல்லது கேள்விகள் எந்தச் சூழலிலும் ஏற்கத்தக்கவை அல்ல. ஆனால் அந்த யூடியூபரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம்.

விமர்சனங்கள் என் தொழிலின் பகுதி என்பதை அறிவேன். ஆனால் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கேள்விகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதே கேள்வியை ஒரு நடிகரிடம் கேட்பார்களா? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் உறுதியாக நிற்பது என் பொறுப்பு என்று நினைக்கிறேன். இது எனக்காக மட்டுமல்ல, இதே போன்ற அனுபவங்களை சந்தித்த அனைவருக்கும். படம் மற்றும் என் நடிப்பு குறித்த கேள்விகளையே நான் விரும்புகிறேன். கடினமான சூழலில் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

எனக்கு நடந்தது புதிதல்ல. இது பல இடங்களில் நடக்கிறது. உடல் கேலி செய்வதை இயல்பாக்குகிறது. நமது அசௌகரியத்தை வெளிப்படுத்தவும், தவறை சுட்டிக்காட்டவும் உரிமை உண்டு. எனக்கு கிடைத்த அனைத்து ஆதரவுக்கும் நன்றி. இது எதிர்பாராதது. சென்னை பத்திரிகையாளர் மன்றம், அம்மா சங்கம் (மலையாள திரைத்துறை), தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்றி. பத்திரிகைகள், ஊடகங்கள், பொதுமக்களின் உறுதியான ஆதரவுக்கு நன்றி. எனது சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் தொழில்துறை அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

6 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

6 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

7 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

7 மணத்தியாலங்கள் ago