#image_title
‘காஞ்சனா’ படத்தில் கோவை சரளாவுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியவர் நடிகை தேவதர்ஷினி. ‘கனவுகள் இலவசம்’ என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர் ‘பார்த்திபன் கனவு ‘என்ற திரைப்படத்தில் நடித்து கலக்கி இருந்தார்.
இதைத்தொடர்ந்து எனக்கு 20 உனக்கு 18 ,அழகிய நீயே, சரவணா, தீபாவளி ,கிரீடம், வேல், சரோஜா,கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தார். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருடன் நடித்த சக நடிகரான சேத்தன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு கணவர் சம்மதத்துடன் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடித்த காஞ்சனா 2 & 3, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற அனைத்து படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது. இது போக விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை, ஷோவில் நடுவராக பங்கேற்று வருகிறார். தேவதர்ஷினி சேத்தன் தம்பதியினரின் மகள் நியதி. இவரும் தற்பொழுது ஹீரோயினாக களமிறங்கி கலக்கி வருகிறார்.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நியதி. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.தற்பொழுது இவர் தனது உடலில் இயல், இசை , நாடகம் என டாட்டூ போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…
தங்கம் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சாமானிய மக்கள் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்க 'கோல்ட் பீஸ்' (Gold…
உங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதேசமயம் மாதம் ஒரு நிலையான வருமானம் கிடைக்க வேண்டும் என விரும்பினால், தபால்…
மாம்பழ சீசனில் பலருக்கும் மாம்பழத்தை அதன் தோல் நீக்கி, சதைப்பற்று வீணாகாமல் எடுப்பது ஒரு சவாலான காரியமாக இருக்கும். தற்போது…
தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது ஒரு புதிய திருப்பத்தை…
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் எடுத்துள்ள அதிரடி முடிவு, உலக கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…