Categories: சினிமா

உச்ச நடிகையாக இருக்கும் போது உதவி இயக்குனர் மேல் காதல்… ஆனால் அந்த காதலே சினிமா ஆசைக்கு குறுக்கே வந்தால்… பானுமதி எடுத்த முடிவு!

Spread the love

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் பானுமதி. தமிழ் சினிமா நடிகைகளில் மிகவும் சுயமரியாதை கொண்டவர். எம் ஜி ஆரையே மிஸ்டர் எம் ஜி ஆர் என்று பேர் சொல்லி அழைக்கக் கூடியவர். அதுபோல பலரையும் தூக்கியெறிந்து பேசக் கூடியவர். ஆனால் அவர் பக்கம் நியாயம் இருக்கும் என்பதால் அவருக்கான வாய்ப்புகள் குறையவில்லை.

ஆனால் இவ்வளவு சுயமரியாதையோடு இருந்த பானுமதி, தன்னுடைய காதலுக்காக பல தியாகங்களை செய்து ஒரு அக்மார்க் குடும்பப் பெண்ணாக மாறிய சம்பவமும் நடந்ததுண்டு. பானுமதி நடித்த ஹிட் படங்களில் ஒன்று கிருஷ்ண லீலா. அப்போது புகழின் உச்சத்தில் இருந்தார் பானுமதி. ஆனால் அந்த படத்தின் உதவி இயக்குனரான ராமகிருஷ்ணா என்பவரைக் கண்டதும் காதல் கொண்டார் பானுமதி.

இந்த காதலை தன்னுடைய வீட்டில் சொல்லி திருமணத்துக்குப் பேச சொல்லியுள்ளார். முதலில் மறுத்த அவரின் அப்பா வெங்கட சுப்பையா பிறகு ஒப்புக்கொண்டு ராமகிருஷ்ணாவை அழைத்து பேசியுள்ளார். பானுமதியை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் “அவர் இனிமேல் சினிமாவில் நடிப்பதோ, கச்சேரிகளில் பாடுவதோ கூடாது” என்று நிபந்தனை வைத்துள்ளார் அவர்.

பானுமதியின் குடும்பத்தினர் இதற்கு மறுத்தாலும் பானுமதி தன் காதலுக்காக நடிப்பை விட முடிவு செய்து குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்துகொண்டு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். அப்போது பிரபல தயாரிப்பாளரான பி என் ரெட்டி என்பவர் தான் எடுக்கும் ‘சொர்க்க சீமா’ எனும் படத்தில் நடிக்க பானுமதியை விட்டால் வேறு ஆள் இல்லை என்று சொல்லி அவரை வற்புறுத்தியுள்ளார். ஆனாலும் பானுமதி நடிக்க முடியாது என்று ஒரேயடியாக மறுத்துவிட்டார்.

இதனால் கடுப்பான ரெட்டி, ராமகிருஷ்ணாவுக்கு போன் செய்து “நீ ஏன் இப்படி உன்னுடைய தாழ்வு மனப்பாண்மையால் ஒரு நல்ல நடிகையின் திறமையை வீணாக்குகிறாய்? உனக்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை” எனக் கண்டபடி பேசிவிட்டாராம். அவரின் இந்த பேச்சால் தன்னுடைய தவறை உணர்ந்த ராமகிருஷ்ணா, மனைவி பானுமதியிடம் ஆலோசித்து தொடர்ந்து அவர் நடிக்கட்டும் என்ற முடிவை எடுத்துள்ளார்.

vinoth

Recent Posts

திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய வைகோ…. திருச்சியில் நடுத்தெருவில் திமுகவினர் செய்த காரியம்… தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…

19 minutes ago

“உங்களை கையெடுத்து கும்பிடுறேன்… மனுஷன் உயிர் வேற”… பாக்யராஜ் உடலுக்கு முன்னால் கைகூப்பி கதறிய ராதிகா சரத்குமார்… கலங்க வைத்த அந்த ஒரு சம்பவம்..!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…

24 minutes ago

ரூ.1 கோடி வசூல் யாரும் எதிர்பாராத சாதனை…! ரஜினி, கமல் படங்களை ஓரம் கட்டிய பாக்யராஜின் ‘அந்த’ படம் எது தெரியுமா…?

தமிழ் திரையுலகில் திரைக்கதை அமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்டவர் இயக்குநர் கே.…

27 minutes ago

செல்வப்பெருந்தகையின் பதவி பறிப்பு…. தமிழ்நாடு காங்கிரஸின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு…

29 minutes ago

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. அலறியடித்து ஓடிய பெண்”…. கண்ணிமைக்கும் நேரத்தில் சுற்றிய 10 குரங்குகள்… அடுத்த நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

சென்னை தாம்பரம் அருகே உள்ள கழுகுமலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலில், குரங்குகள் சூழ்ந்து கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலும்…

39 minutes ago

தமிழக அரசியலில் அடுத்த வெடி! “த்ரிஷாவிற்கு துணை முதல்வர் பதவி…?” வாய்விட்டு மாட்டிக்கொண்ட முன்னாள் அமைச்சர்…!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இந்த காரசாரமான விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…

44 minutes ago