#image_title
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அழைக்கப்படுபவர் சிவகுமார். 80 வயதுக்கும் மேல் இளமையாக இன்றும் மணிக்கணக்காக சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். அவரின் இளமைக்குக் காரணம் அவரின் உணவுப் பழக்கங்களும், யோகா போன்ற உடற்பயிற்சிகளும்தான் என்று சொல்லப்படுகிறது.
சிவகுமார் லக்ஷி குமாரி என்பவரோடு திருணம் ஆகி சூர்யா, கார்த்தி மற்றும் பிருந்தா மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் சூர்யாவும் கார்த்தியும் தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். ஓவியக் கல்லூரியில் ஓவியம் படித்த சிவகுமார், தமிழ் சினிமாவில் நடிகரானார். முதலில் சிறு சிறு வேடங்களில் நடித்த அவர் பின்னர் கதாநாயகனானார்.
200க்கும் மேற்பட்ட படங்களில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த அவருக்கு வீட்டில் திருமணத்துக்குப் பெண் பார்க்க தொடங்கியுள்ளனர். ஆனால் ஒன்றரை வருடங்கள் தேடியும் அவருக்கு பொருத்தமான பெண் கிடைக்கவில்லை.
#image_title
அப்போது ஒரு நாள் அவர் மூத்த நடிகை பானுமதியை சந்தித்து பேசும்போது திருமணம் பற்றிய பேச்சுவந்து தனக்குப் பெண் கிடைக்கவில்லை என சிவகுமார் கூறியுள்ளார். அதைக் கேட்ட பானுமதி அவரின் ஜாதகத்தை கேட்டு வாங்கி பார்த்துள்ளார். அவருக்கு ஜோதிடத்தில் நல்ல ஞானம் உண்டு என சொல்லப்படுகிறது.
சிவகுமாரின் ஜாதகத்தைக் கணித்த “இந்த ஆண்டு (1974) செப்டம்பர் மாதத்துக்குள் உனக்கு திருமணம் நடக்கும். அப்படி நடக்கவில்லை என்றால் திருமணம் ஆகி கணவனை இழந்து குழந்தையோடு இருக்கும் ஒரு பெண்ணை அழைத்து வந்து வாழ்க்கைக் கொடு” என சொல்லிவிட்டு சென்றாராம். இதைக் கேட்டதும் சிவகுமாருக்கு பல குழப்பங்கள் மனதில் எழுந்துள்ளன.
ஆனால் பானுமதி சொன்னது போல அந்த ஆண்டு ஜுன் மாதத்திலேயே சிவகுமாருக்கும் அவரது மனைவிக்கும் திருமணம் நடந்துவிட்டதாம்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…
தமிழ் திரையுலகில் திரைக்கதை அமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்டவர் இயக்குநர் கே.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு…
சென்னை தாம்பரம் அருகே உள்ள கழுகுமலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலில், குரங்குகள் சூழ்ந்து கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலும்…
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இந்த காரசாரமான விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…