Categories: சினிமா

மலையாளத்தில் அறிமுகமாகும் பிரபல நட்சத்திர தம்பதி மகள்… அம்மா இடத்துக்கு நானும் நிச்சயம் வருவேன் எனவும் சவால் விட்ட வாரிசு!

Spread the love

இயக்குனர் சுந்தர் சி – நடிகை குஷ்பு தம்பதியின் 2வது மகள் அவந்திகா விரைவில் சினிமாவில் அறிமுகமாகிறார். வெளிநாட்டில் நடிப்பு பயிற்சி பெற்று திரும்பிய அவர் ஆரம்பம் என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகி ஆகி இருக்கிறார். மேலும் தமிழில் டபுள் ஆக்குபன்சி என்ற படத்திலும் அவந்திகா நடித்து வருகிறார். இதுகுறித்து நடிகை அவந்திகா கூறியதாவது, நான் நடிகை ஆகிறேன் என்று சொன்னதும் அம்மாவும் அப்பாவும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள்.

சினிமா சாதாரண விஷயம் இல்லை; கொஞ்சம் கடினமானது, பார்த்துக்கொள் என்று மட்டும் அட்வைஸ் சொன்னார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பே நான் நடிக்க தயாராகி விட்டேன். உடம்பை ஸ்லிம்மாக்கி நடிப்பு பயிற்சி பெற்று தயாரான பிறகுதான் நடிக்க வாய்ப்பு தேடினேன். அப்பா அம்மா சொன்ன மாதிரி சினிமாவை சீரியஸாக எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன். சில ஆண்டுகள் என்னை அம்மாவோடு ஒப்பிடுவார்கள். அதை தவிர்க்க முடியாது.

அம்மாவுக்கு கிடைத்த மாதிரியான கேரக்டர் எனக்கும் கிடைக்க வேண்டும். அவர் கொடுத்த உழைப்பு அக்கறையை நானும் கொடுக்க வேண்டும். அம்மாவின் ஜீன் என்னிடம் உள்ளது. நான் கடுமையாக உழைக்கும் போது அம்மாவின் இடத்திற்கு வர முடியும் என்று நினைக்கிறேன். அப்பா அம்மா என் விஷயத்தில் தலையிடாமல் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். நானே கதை கேட்கிறேன். நானே முடிவு செய்கிறேன். மக்களுக்கு பிடித்த நடிகையாக வருவேன். அதற்காக கடினமாக உழைப்பேன் என்று அவந்திகா உறுதியாக கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

5 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

5 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

6 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

6 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

6 மணத்தியாலங்கள் ago