சின்னத்திரையில் பெண் காமெடியார்கள் இருப்பது என்பது மிகவும் பெரிய விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றாலே ஆண்கள் தான் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர். அறந்தாங்கி நிஷா கடந்த 2015-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன்பிறகு நிஷாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு ரிலீசான மாரி 2 திரைப்படத்தில் அட்டு ஆனந்தி கதாபாத்திரத்தில் அறந்தாங்கி நிஷா நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, சீமராஜா, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அறந்தாங்கி நிஷா நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 1, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்கியுள்ளார். பிக் பாஸ் சீசன் 4 அறந்தாங்கி நிஷா போட்டியாளராக பங்கேற்று 70 நாள் அங்கேயே இருந்தார். இவரது நகைச்சுவைக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படியான நிலையில் அறந்தாங்கி நிஷா புதிய வீடு வாங்கி பால் காய்ச்சி உள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு அவர் ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார்.
அதில், உங்க எல்லாரோட ஆசிர்வாதத்தோட சென்னை வீடு காய்ச்சியாச்சு . வீட்டுக்கு அப்பாவோட பெயர் தான் வச்சிருக்கேன், நான் பொறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் எனக்கு சென்னையில் சொந்தக்காரங்கன்னு யாரு கிடையாது, சின்ன வயசுல ஒரு தடவை தான் அப்பா என்ன சென்னைக்கு கூட்டிட்டு வந்தாங்க, அதுக்கப்புறம் நான் எப்ப சென்னைனு சொன்னாலும் இந்த கூட்டிட்டு போறேன் மா கூட்டிட்டு போறேன்னு என்னை எப்பவும் ஏமாத்திட்டே இருப்பாங்க, திரும்ப நான் சென்னையில பயணிக்கிறதுக்கு காரணம் என்னுடைய அப்பா, அதுக்கு அப்புறம் என்னுடைய தமிழ்.
ஆறு மாசமா சென்னையில வீடு தேடுன போ ஆர்டிஸ்ட் வீடு தர மாட்டேன், முஸ்லிம்க்கு வீடு தர மாட்டேன் இப்படி எத்தனையோ விமர்சனங்களை சந்தித்ததுக்கு அப்புறம் குடும்பமா சேர்ந்து சென்னையில் ஒரு வீடு வாங்கிறலாம்னு முடிவு எடுத்து இப்போ வீடு வாங்கியாச்சு,எப்பவுமே எல்லாரும் முன்னாடியும் நம்ம ஜெயிக்கிறதை விட நம்ம எங்க தோக்குறமோ அங்கதாங்க ஜெயிக்கணும், என்னோட வெற்றிக்கு எப்பவுமே என்னுடைய குடும்பமும் என்னுடைய நண்பர்களும் என்னுடைய ரசிகர்களும் என்னுடைய தமிழும் தான் காரணம் என கூறி நிஷா பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து நிஷாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…