தெலுங்கில் ராஜமுந்திரி ரோஸ் மில்க், மேட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்தான் அனந்திகா சனில்குமார். தமிழில் விக்ரம் பிரபுவின் ரெய்டு படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவான லால் சலாம் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க அனந்திகா சனில்குமார் கமிட் ஆகியுள்ளார் .
இவர் நடித்துள்ள 8 வசந்தலு படத்தின் டிரைலரை நேற்று பட குழு வெளியிட்டது. இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படியான நிலையில் அனந்திகா சனில்குமார் குறித்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 19 வயது மட்டுமே ஆகக்கூடிய இவர் பல திறமைகளை கொண்டவர். பயிற்சி பெற்ற கிளாசிக்கல் நடந்த கலைஞர். கராத்தேவில் கருப்பு பெல்ட், களரிபயட்டு கலையில் தேர்ச்சி பெற்றவர், பாய் சண்டையில் தேர்ச்சி பெற்றவர், செண்டா என்ற தாள வாத்தியம் வாசிப்பவர், ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சட்டப் படிப்பையும் படித்துக் கொண்டிருக்கின்றார். இவருடைய இந்த திறமைகள் தற்போது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத் தலைமையகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில், 43 வயதான மகபூப் பீ என்ற பெண் ஊர்க்காவல்…
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ராஜுலா தாலுகாவின் மண்டல் கிராமத்திற்கு அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் 36…
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிடுவதற்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள். சிலர் உயரமான இடங்களில் ஏறி ஆபத்தான…
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், கடந்த நவம்பர் 2-ஆம் தேதி இரவு 7:30 மணியளவில் கிரிஜா பாய் மற்றும்…
ஃபியூச்சர் சிட்டி எல்லைக்குட்பட்ட நெடுனூர் பகுதியில் உள்ள மான்யகுடா தாண்டாவைச் சேர்ந்த அனுஷா என்ற திருமணமான பெண், பிரேம் குமார்…
கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில், தனது 24 வயது மகனைக் கொலை செய்த வழக்கில் 44 வயதுத் தாயும் அவரது…