Categories: சினிமா

நடிகை அல்போன்ஸாவை ஞாபகம் இருக்கா?… குடும்ப வாழ்ககையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஸ்ஸான கேரியர்!

Spread the love

நடிகை அல்போன்ஸா தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் கவர்ச்சி நடிகையாக பாடல்களில் நடனமாடியுள்ளார். பாட்ஷா படத்தில் அறிமுகமான அவருக்கு அதன் மூலம் மிகப்பெரிய பிரேக் கிடைத்தது. அடுத்தடுத்து நாடோடி மன்னன், ரட்சகன், மாண்புமிகு மாணவன், சொல்லமலே என 50க்கும் மேற்பட்ட படங்களில் கவர்ச்சி நடனம் ஆடினார்.

இவர் நசீர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்கள் திருமண வாழ்வு நீண்ட் நாட்கள் நீடிக்கவில்லை. குழந்தை பிறந்த பின்னர் இருவரும் விவாகரத்து செய்தனர்.

அதன் பின்னர் தனிமையில் வாழ்ந்த அல்போன்ஸா தனது சகோதரர் ராபர்ட்டின் நண்பரான வினோத் குமார் எனபவரை காதலித்ததாகவும்,  அவர்கள் இருவரும் திருமனம் செய்துகொள்ளாம்ல ஒன்றாக வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் தன்னை திருமணம் செய்து கொள்ள வினோத் வற்புறுத்தியதாகவும் ஆனால் கணவரை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்ய முடியாது என்பதால் காத்திருக்க அவர் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. இது சம்மந்தமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வினோத் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. வினோத்குமார் இறப்பதற்கு முன்னால் கவசம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்னரே அவர் இறந்ததுதான் சோகம்.

ஆனால் வினோத் குமாரின் குடும்பத்தினரோ அவரை அல்போன்ஸாதான் அடித்தே கொன்று விட்டதாக குற்றம்சாட்டினர். இதற்கிடையில் அல்போன்ஸா தூக்க மாத்திரைகளை தின்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர்.

இது சம்மந்தமாக அல்போன்ஸா மீது வழக்கு ஒன்றும் நிலுவையில் இருந்த நிலையில் அவர் திடீரென காணாமல் போனார். அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை.  இந்த தற்கொலை வழக்கால் அவர் பெயர் காலியான நிலையில் அதன் பின்னர் அவருக்கான சினிமா வாய்ப்புகளும் வரவில்லை.

vinoth

Recent Posts

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

8 minutes ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

39 minutes ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

52 minutes ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

1 மணத்தியாலம் ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

2 மணத்தியாலங்கள் ago

கடவுளே… இப்படியா ஆகணும்…? தலையில் குத்திய இரும்பு கம்பிகள்… துடிதுடித்த வாலிபர்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago