#image_title
பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்துப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக திரைத்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன அட்டகத்தி திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு புகழைத் தேடித் தந்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு ரிலீசான காக்கா முட்டை திரைப்படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கப்பட்டது.
இவர் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். அட்டகத்தி, ரம்மி, திருடன் போலீஸ், பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்று பேசினார். அந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக்கும் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது, கிரிக்கெட் எல்லாருக்குமே பிடிச்ச ஒரு விளையாட்டு. நான் கனா படத்தில் நடிச்சேன். தினேஷ் கார்த்திக் சார்கிட்ட அதை பத்தி சொன்னேன். அவர் படம் பார்க்கலன்னு சொன்னாரு. அது மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. நீங்க அந்த படம் கண்டிப்பா பாருங்க. எனக்கு நிஜமாகவே பேட், பால் எதுவுமே பிடிக்க தெரியாது. ஆனால் கனா படத்தில் நான் ஆப் ஸ்பின்னரா பிளே பண்ணி இருந்தேன்.
அந்த பந்து எப்படி போடணும்னு ஒரு ஆறு மாசமா டைம் எடுத்து பிராக்டிஸ் பண்ணி நடிச்சேன். கிரிக்கெட் விளையாடும் போது நிறைய அடிபடும். எனக்கும் அடி பட்டிருக்கு. எனக்கு எப்போ கூட ஞாபகம் இருக்கு. கோவிட் டைம் நடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே ஒரு பந்து ஒரு ரன்ல தோத்துடுச்சு. கிரிக்கெட் அப்படின்றது ஒரு எமோஷன். எல்லாருக்குமே அது ஒரு பர்சனலா இருக்கும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு என கூறியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…