இந்த சிறுவயது புகைப்படத்தில் கியூட்டாக இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா? அடடே இவரா?…

By Begam on வைகாசி 15, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது ‘கங்குவா’ திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இவரை போலவே அவரது தம்பி நடிகர் கார்த்திக்கும் தற்பொழுது திரையுலகில் கதாநாயகனாக கலக்கி வருகிறார்.

   

பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் கார்த்தி, தற்பொழுது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார் .நடிகர் கார்த்தியின் நடிப்பில் தற்பொழுது ஜப்பான் திரைப்படம் உருவாகி வருகிறது.

   

Karthi Sivakumar at Nenjil Thunivirunthal Audio Launch

 

இந்த ஆண்டு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படங்களின் பட்டியலில் ஒன்றாக நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது .

அந்த வகையில் தற்பொழுது நடிகர் கார்த்தியும் சூர்யாவும் இணைந்து எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம் இணையத்தில் அதிகம் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சின்ன வயசுலயே இவ்ளோ கியூட்டா இருக்காங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.