“என்னை மன்னிச்சிடுங்க அண்ணே.. இது என்னோட தப்பு தான்..” கேப்டன் மறைவிற்கு வீடியோ வெளியிட்டு கதறி அழுத நடிகர் விஷால்…

By Begam

Published on:

கருப்பு நிறம்.. சிரித்த முகம்.. கம்பீர நடை.. கணீர் குரல் என இந்த அடையாளங்களை சொல்லி யார் இந்த நடிகர் என்று கேட்டால் அனைவரும் சொல்லும் முதல் பெயர் நடிகர் விஜயகாந்த் அவர்கள் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது முதல் பார்வையிலேயே கவர்ந்து இழுத்து விடுவதில் வல்லவர் இவர். தமிழகத்தையே தனது நடிப்பால் கட்டிப்போட்ட இவர் இன்று இம்மண்ணுலகை விட்டு பிரிந்து விண்ணுலகை அடைந்துள்ளார்.

vijayakanth11

சினிமாவில் மட்டுமின்றி, அரசியலிலும் இவர் செய்த தர்மங்கள் ஏராளம் .எல்லோரிடமும் அன்பாகவும், அனைவரையும் சரிசமமாகவும் நடத்தக்கூடிய நடிகர் விஜயகாந்தின் மறைவு தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 150 படங்களுக்கும் மேல் தன் வாழ்நாளில் நடித்த நடிகர் விஜயகாந்த் 2015க்கு பிறகு எந்தவொரு திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கி அதன் தலைவராக மட்டுமே செயல்பட்டு வந்த இவர், அரசியலில் செய்த சாதனைகளும் ஏராளம்.

   

இதைத்தொடர்ந்து அவர் தனது உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே  ஓய்வெடுத்து வந்தார். வீட்டில் இருந்தபடியே அவருக்கு சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. சில வாரங்களுக்கு முன்னால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பூரண நலம் பெற்று வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

 

இதை தொடர்ந்து கொரோனா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இன்று காலை 6 மணி அளவில் அவர் மரணம் அடைந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியுள்ளது. அவருக்கு  திரையுலகினரும், ரசிகர்களும், தொண்டர்களும் என பலரும் தற்பொழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் நடிகர் விஷால் கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ ஒன்றை தனது twitter பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் ‘விஜயகாந்த் அண்ணா இறந்துட்டார் என்கிற விஷயம் இப்பதான் கேள்விப்பட்டேன். அண்ணே என்ன மன்னிச்சிடுங்க. அண்ணா சத்தியமா இந்த நேரத்துல நான் உங்க பக்கத்துல இருந்திருக்கணும் .உங்க முகத்தை ஒரு தடவை பார்த்திருக்கனும். உங்க காலை தொட்டு கும்பிட்டு இருக்கணும். நான் வெளிநாட்டில் இருக்கிறது என் தப்புதான். என்ன மன்னிச்சிடுங்க அண்ணா. நல்லது செய்ய வேண்டும் என்பதை அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல.  நடிகர் சங்க விஷயத்துல நீங்கதான் எனக்கு ரோல் மாடல். உங்களை பத்தை பலரும் பல விஷயங்களை சொல்லி கேள்வி பட்டிருக்கேன். அப்படி நானும் இருக்கணும்னு நினைச்சிருக்கேன்.  உங்க ஆத்மா சாந்தி அடையட்டும்’ என அழுதுகொண்டே தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Vishal (@actorvishalofficial)