“ஒரு படத்தை தள்ளிப் போடு-னு சொல்ல நீ யாரு..? சினிமா யாருக்கும் சொந்தம் கிடையாது…” ரெட் ஜெயண்ட்ஸ் குறித்து ஆவேசமாக கொந்தளித்த நடிகர் விஷால்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது ரத்னம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது.

   

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, யோகிபாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். வருகிற ஏப்ரல் 26 அன்று ரத்னம் திரைப்படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்பொழுது ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்தின் புரமோஷன் வேலைகளில் நடிகர் விஷால் தீவிரமாக இறங்கியுள்ளார்.  சமீபத்தில்’ ரத்னம்’ படத்தின் புரமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் விஷால், ரெட் ஜெயண்ட் மூவீஸ் குறித்து மிகவும் காட்டமாக பேசியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது,’ ஒரு படத்தை தள்ளிப்போ என சொல்வதற்கு யாருக்குமே அதிகாரம் கிடையாது. யாரும் சினிமாவை சொந்தம் கொண்டாட முடியாது.  வட்டிக்கு வாங்கி, வேர்வை சிந்தி, நாங்கெல்லாம் ரத்தம் சிந்தி, ஒரு படத்தை எடுத்து கொண்டுவந்தா, தள்ளி வாங்கனு நீங்க சொல்லறீங்க. யாரு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது..?  இதை பத்தி பேச இங்க யாருக்கும் தைரியம் கிடையாது’ என நடிகர் விஷால் அந்த பேட்டியில் ரெட் ஜெயண்ட்ஸ் குறித்து தனது மனக்குமுறலை கொட்டி கொந்தளித்து பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ…