Categories: சினிமா

“வரலட்சுமிக்கு  கல்யாணம்-னு சொன்னவுடனே எனக்கு ரொம்ப…. ” வரலட்சுமி நிச்சயதார்த்தம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் விஷால்…

Spread the love

தமிழ் சினிமாவின்  முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஷால். 2004 இல் வெளியான ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர்  நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்தது.

இதற்கிடையே விஷால் நடிப்பது மட்டுமின்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார்.குறிப்பாக ஆதரவு இல்லாத மாணவ, மாணவிகளின் கல்விக்கு தன்னால் என்ன முடியுமோ அதை தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல் விவசாயிகள், ஏழைகள் உள்ளிட்டோருக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்துவருவது பாராட்டை பெற்றுவருகிறது.

ஆனால் நடிகர் விஷால் 40 வயதை நெருங்கியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.  இடையில் ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் அவருக்கு நடந்தது. ஆனால் அது திருமணம்வரை செல்லவில்லை. சில வருடங்களுக்கு முன்பு விஷாலும், வரலட்சுமியும் காதலித்துவந்ததாகவும், திடீரென அவர்களது காதல் பாதியில் முடிந்துவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டும் வந்தது. ஆனால் தற்பொழுது நடிகை வரலக்ஷ்மி நிக்கோலாய் என்பவரை திருமணம் முடிக்க உள்ளார். இவர்களது திருமணமும் விரைவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஷாலிடம்  வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘வரலட்சுமிக்கு திருமணம் னு சொன்னதும் நான் ரொம்ப happy ஆகிட்டேன். உண்மையில் அவரை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன்.  வரலக்ஷ்மி மாதிரி போல்ட்-ஆன பொண்ண என் Life-ல பார்த்ததே  இல்ல. அவருடைய கெரியரை தாண்டி அடுத்த லெவலுக்கு அவரின் வாழ்க்கையை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்’ என்று வரலட்சுமியின் திருமணம் குறித்து மனம் திறந்து மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Begam

Recent Posts

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

21 seconds ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

5 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

9 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

11 minutes ago

“நாம் எங்கே வாழ்கிறோம்?” – பெட்ஷீட் துவைக்கப் போன புனே பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: களத்தில் இறங்கிய காவல்துறை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…

15 minutes ago

திமுகவிற்கு விழுந்த பலத்த அடி..! மொத்தமாக தவெக-வில் ஐக்கியமான 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தலைமை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…

16 minutes ago