Categories: CINEMA

கிரிக்கெட்டில் கலக்கும் பிரபல நடிகரின் மகன்… U14 பிரிவில் தமிழக அணிக்கு தேர்வு.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா..!

தமிழ் சினிமாவில் ‘கசட தபர’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகர் விக்ராந்த். இவர் நடிகர் விஜயின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.ஒரு இவர் நடிப்பில் வெளியான பக்ரீத் திரைப்படம் நினைத்த அளவுக்கு வெற்றியை தேடி தரவில்லை. முத்துக்கு முத்தாக திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற சர்வைவர் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இவருக்கென்று ஒரு தனி தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிக்கும் எந்த  கதாபத்திரமாக இருந்தாலும் அதை மக்கள் மனதில்  ஆழ பதிய செய்வார். தற்பொழுது வரை தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள தற்பொழுது வரை திரையுலகில் போராடி வருகிறார்.

சமீபத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க வெளியான லால் ஸலாம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். நடிகர் விக்ராந்த்துக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிகர் விக்ராந்த் நடிப்பில் மட்டுமல்லாமல் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தக்கூடியவர்.

ஏற்கனவே சிசிஎல் கிரிக்கெட் போட்டிகளிலும் அபாரமாக விளையாடி அசத்தியுள்ளார். இந்நிலையில் நடிகர் விக்ராந்தின் மகன் யஷ்வந்த்  14 வயதுக்கு உட்பட்ட தமிழக கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள அவர், மகனை நினைத்து தனக்கு பெருமையாக இருப்பதாகவும், ‘அவன் எதிர்காலத்தில் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்பதுதான் தனது கனவு என்றும், அதற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்களும் விக்ராந்த் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த பதிவு..

Begam

Recent Posts

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

3 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

18 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

19 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

20 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

21 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

23 hours ago