#image_title
தமிழ் சினிமாவில் ‘கசட தபர’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகர் விக்ராந்த். இவர் நடிகர் விஜயின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.ஒரு இவர் நடிப்பில் வெளியான பக்ரீத் திரைப்படம் நினைத்த அளவுக்கு வெற்றியை தேடி தரவில்லை. முத்துக்கு முத்தாக திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற சர்வைவர் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இவருக்கென்று ஒரு தனி தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிக்கும் எந்த கதாபத்திரமாக இருந்தாலும் அதை மக்கள் மனதில் ஆழ பதிய செய்வார். தற்பொழுது வரை தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள தற்பொழுது வரை திரையுலகில் போராடி வருகிறார்.
சமீபத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க வெளியான லால் ஸலாம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். நடிகர் விக்ராந்த்துக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிகர் விக்ராந்த் நடிப்பில் மட்டுமல்லாமல் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தக்கூடியவர்.
ஏற்கனவே சிசிஎல் கிரிக்கெட் போட்டிகளிலும் அபாரமாக விளையாடி அசத்தியுள்ளார். இந்நிலையில் நடிகர் விக்ராந்தின் மகன் யஷ்வந்த் 14 வயதுக்கு உட்பட்ட தமிழக கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள அவர், மகனை நினைத்து தனக்கு பெருமையாக இருப்பதாகவும், ‘அவன் எதிர்காலத்தில் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்பதுதான் தனது கனவு என்றும், அதற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்களும் விக்ராந்த் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த பதிவு..
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக வெற்றி கழக…
உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததாகக் கூறி, கணவர் ஒருவர் தனது வீட்டின் மாடியிலிருந்து…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…
தமிழகத்தில் பட்டா நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்வதை எளிமையாக்க அரசு புதிய இணையவழி விண்ணப்ப வசதியை அறிமுகம்…
உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து தன்னுடைய மனைவியுடன் வீடியோ…
ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில் செயல்படும் ஈரோடு கூட்டுறவு நகர வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகை கையாடல் செய்யப்பட்டதாக…