#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஹரி கிருஷ்ணன் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் இளம் நடிகரான ஹரி கிருஷ்ணன் கடந்த 2014 ஆம் ஆண்டு ரிலீசான மெட்ராஸ் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் பிரபலமானார் முன்னதாக அட்டகத்தி, மரியான் உள்ளிட்ட திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் ஹரிகிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் வட சென்னை, சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களிலும் ஹரி கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்த நிலையில் மேடையில் நடிகர் விக்ரம் பேசியதாவது, ஹரி ஒரு நல்ல நடிகர்.
மெட்ராஸ் படத்திலிருந்து அவரோட நடிப்பு எனக்கு ரொம்ப புடிக்கும். என் வீட்டில் இருப்பவர்களுக்கு கூட மெட்ராஸ் படத்துல ஹரி நடிச்சது ரொம்ப பிடிக்கும். ப்ளீஸ் டைரக்டர் ஹரியை நோட் பண்ணிக்கோங்க. அவர் பென்டாஸ்டிக் ஆக்டர். இந்த படத்துலயும் ஹரி நல்ல நடிச்சிருக்காரு. எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா நான் அப்பப்போ ஹரிய பார்ப்பேன்.
சேது படத்துக்கு முன்னாடி இந்த விஷயம் எனக்கு வொர்க் அவுட் ஆகணும் அப்படிங்கறதுக்காக நான் ரொம்ப முயற்சி பண்ணுவேன். அதே மாதிரி ஹரி கையில கட்டைய வச்சிருப்பாரு திடீர்னு வேற வேற மாதிரி போஸ் கொடுப்பாரு. ஏதோ ஒரு காட்சி அப்படின்னு நினைக்காம ஒவ்வொரு காட்சியிலும் வேற வேற மாதிரி முயற்சி பண்ணுவாரு. ஹரியை பார்க்கும்போது இளம் வயசுல என்ன பார்த்த மாதிரியே இருந்துச்சு. ஒரு நாள் ஹரி ஒரு பெரிய நடிகரா வருவாரு. அது சீக்கிரத்துல நடக்கும் என கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…