‘நா ரெடி தான் வரவா’.. பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகும் விஜயின் மகன் சஞ்சய்.

By Begam on ஆகஸ்ட் 28, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்பொழுது வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. இதை தொடர்ந்து லியோ திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

   

நடிகர் விஜய்க்கு ஜேசன்  சஞ்சய் என்ற மகன் உள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவர் சினிமா துறை சார்ந்த படிப்பை கடந்த ஆண்டு முடித்தார். இதை தொடர்ந்து அவர் சினிமாவில் விரைவில் காலடி எடுத்து வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தனது தந்தையைப் போல ஹீரோவாக அல்லாமல் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

   

 

ஏற்கனவே ஒரு சில குறும்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் சஞ்சய் ‘புல் தி டிரிக்கர்’ என்கிற குறும்படத்தை இயக்கியிருந்தார். இந்த குறும்படம் யூடியூபில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம்.

அடுத்த படத்துக்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்களை லைகா நிறுவனம் டிவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்தநிலையில், விஜய் சேதுபதியை வைத்து தனது முதலாவது திரைப்படத்தை ஜேசன் இயக்குவார் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.