Categories: சினிமா

தாய்லாந்துக்கு இன்பச் சுற்றுலா… மாரடைப்பால் பிரபல நடிகரின் மனைவி திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

Spread the love

கன்னட திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜயராகவேந்திரா. இவர் குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரி சிவராம் என்பவரின் மகள் ஸ்பந்தனா என்பவரை இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவரின் மனைவி கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அபூர்வா என்ற திரைப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்த விஜயராகவேந்திரா கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதற்காக தாய்லாந்து சுற்றுலா சென்றுள்ளார். மகிழ்ச்சியாக இருப்பதற்கு சுற்றுலா சென்ற இடத்தில் அவரின் மனைவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சுற்றுலா சென்ற இடத்தில் பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

தர்பூசணி பழம் உயிருக்கே எமனான கொடுமை..! சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுவன் பலி; 3 குழந்தைகள் கவலைக்கிடம் – சத்தீஸ்கரில் அதிர்ச்சி..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மேலும் மூன்று குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு…

3 minutes ago

“தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!… 3.5 லட்சம் கோடி பிஎஃப் நிதியில் கை வைக்க முடியாது… EPFO-வின் புதிய மாஸ்டர் பிளான்”…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனியார் அறக்கட்டளைகளை (Private Trusts) ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய நிலையான செயல்பாட்டு…

4 minutes ago

சீனியர் சிட்டிசன்களுக்கு ஜாக்பாட்… “வங்கி FD-யா அல்லது SCSS திட்டமா?… 8.2% வட்டியுடன் உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக இரட்டிப்பாக்க சிறந்த வழி இதோ”…!!!

ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள் தங்களின் சேமிப்பிற்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தைப் பெற வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும்…

14 minutes ago

26 மணி நேரத்தில் 3 கொலைகள்.. ரத்த வெறியில் அலைந்த சைக்கோ கில்லர் – சுட்டு வீழ்த்திய காவல்துறை.. நடந்தது என்ன..?

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியில் 26 மணி நேர இடைவெளியில் மூன்று பேரைச் சுட்டுக் கொன்ற பஞ்சாப்பைச் சேர்ந்த 'சைக்கோ'…

17 minutes ago

பந்து சிக்ஸருக்குப் பறந்தது.. ப்ரீத்தி ஜிந்தாவின் ரியாக்ஷன் இணையத்தில் தெறிக்கிறது! ஸ்ரேயாஸ் ஐயரின் ஒற்றைக்கை சாகசத்தால் மிரண்டுபோன உரிமையாளர்..!!

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியின் போது, டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்…

24 minutes ago

“வெயிலில் காய்கறிகள் அழுகுகிறதா?… இனி கவலை வேண்டாம்… பிரிட்ஜ் இல்லாமலேயே 20 நாட்கள் காய்கறிகளை பிரெஷ்ஷாக வைக்கலாம்… இதோ MIT கண்டுபிடித்த ‘மண்பானை’ ரகசியம்”…!!!

கோடை காலத்தில் காய்கறிகள் விரைவில் அழுகிப்போவதைத் தடுக்க, பிரிட்ஜ் இல்லாமலேயே அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்க பல எளிய வழிமுறைகள் உள்ளன.…

24 minutes ago