என்னது, விஜய்யின் இந்த சூப்பர் ஹிட் படங்களெல்லாம் ரீமேக் படங்களா?.. என்னப்பா சொல்றீங்க.. லிஸ்ட் இதோ..!

By Nanthini on புரட்டாதி 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய் நடித்த ரீமேக் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

   

விஜய் நடிப்பில் 1998 ஆம் ஆண்டு இயக்குனர் பாசில் இயக்கத்தில் ஷாலினி நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படம் 1997 ஆம் ஆண்டு மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் மற்றும் ஷாலினி நடிப்பில் வெளியான அனியாத்திபிறவு என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

   

 

அடுத்து 1998 ஆம் ஆண்டு விஜய், ரம்பா மற்றும் தேவயானி நடிப்பில் இயக்குனர் செல்வகணபதி இயக்கி வெளியான திரைப்படம் தான் நினைத்தேன் வந்தாய். இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியான பெல்லி சண்டடி என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

2000 ஆம் ஆண்டு விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான பிரியமானவளே என்ற திரைப்படத்தை இயக்குனர் செல்வகணபதி இயக்கி இருந்தார். விஜயின் தந்தையாக இந்த படத்தில் SBP நடித்திருந்தார். இந்த திரைப்படம் 1996 ஆம் ஆண்டு தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் சௌந்தர்யா நடிப்பில் வெளியான பவித்ர பந்தம் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

2001 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்து இயக்குனர் சித்திக் இயக்கியிருந்த திரைப்படம் தான் பிரண்ட்ஸ். இந்த திரைப்படத்தில் தேவயானி, விஜயலட்சுமி மற்றும் ரமேஷ் கண்ணா என பலரும் நடித்திருந்தனர். இந்த படம் மலையாளத்தில் 1999 ஆம் ஆண்டு ஃபிரண்ட்ஸ் என்ற பெயரிலேயே வெளியான படத்தின் ரீமேக் ஆகும்.

2001 ஆம் ஆண்டு வெளியான விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படம் 1999 ஆம் ஆண்டு தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான தம்முடு என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

 

2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான யூத் திரைப்படம் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் தான். தெலுங்கில் வேணு தொட்டம்புடி நடிப்பில் வெளியான சிறு நவ்வுதோ திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

விஜய் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவிய வசீகரா திரைப்படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான நுவ்வு நாக்கு நச்ச் சாவு என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

விஜய் நடிப்பில் முதல் 50 கோடி வசூலை பெற்றுக் கொடுத்த கில்லி திரைப்படம் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஒக்கடு என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

இயக்குனர் ரமணா இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான ஆதி திரைப்படம் தெலுங்கில் 2005 ஆம் ஆண்டு வெளியான அதான் நோக்கடே என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான காவலன் திரைப்படம் மலையாளத்தில் வெளியான Body guard என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

பிரபுதேவா விஜய்யை வைத்து இயக்கிய திரைப்படம் தான் வில்லு. 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த நிலையில் இந்த படம் 1998 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சொல்லிடிர் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

விஜய் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான வேலாயுதம் திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி மற்றும் ஜெனிலியா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வெளியான ஆசாத் என்ற தெலுங்கின் ரீமேக் திரைப்படமாகும்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் திரைப்படம் இந்தியில் 2010 ஆம் ஆண்டு வெளியான 3 இடியட்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.