#image_title
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தளபதியாக நீங்காத இடத்தை பிடித்தவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் ‘தமிழக வெற்றி கழகம்’ என்னும் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். 2026 இல் நடைபெறும் தேர்தலில் அவர் போட்டியிடுவதாகவும், அறிவித்துள்ள விஷயம் தான் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டு வந்தது.
அரசியலில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சினிமாவிலிருந்தும் விலகப் போவதாக கூறியுள்ளார். தற்பொழுது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இவர் கமிட் செய்த திரைப்படத்தை முடித்துவிட்டு முழுமையான அரசியலில் ஈடுபட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 14 நாளை கோட் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளபதி விஜய்க்கு போட்டியாக எப்பொழுதும் ஏதாவது ஒரு விஷயத்தை செய்பவர் நடிகர் விஷால்.
விஜய் தளபதி -னா நான் புரட்சித் தளபதி என தொடங்கி இந்த போட்டி சமீபத்தில் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பொழுது அவருக்கு போட்டியாக விஷாலும் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் ஏப்ரல் 14 ஆன நாளை தமிழர் புத்தாண்டை முன்னிட்டு கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆவதால், அதற்கு போட்டியாக நடிகர் விஷால் ‘ரத்னம்’ பட டிரைலரை ரிலீஸ் செய்ய அதிரடி முடிவெடுத்துள்ளாராம்.
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…