தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. நடிகராகவும் இசையமைப்பாளராகவும் திரையுலகில் பிசியாக வலம் வந்த நடிகர் விஜய் ஆண்டனியின் வாழ்க்கையில் நேற்று ஒரு பெரிய புயல் வீசியது. இவரது மூத்த மகளான மீரா நேற்று அதிகாலை 3 மணிக்கு தற்கொலை செய்து கொண்டார்.
17 வயதான மீரா பிளஸ் டூ படித்து வரும் நிலையில் விஜய் ஆண்டனி தனது குடும்பத்துடன் டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார். நேற்று அதிகாலை 1 மணி வரை விஜய் ஆண்டனி தனது அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அவர் மீராவை பார்த்த போது பதட்டத்துடன் காணப்பட்டாராம்.
இதைத்தொடர்ந்து தான் அவர் 3 மணி அளவில் அவர் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஒரு வருடமாக அவர் மனஅழுத்தத்திற்க்காக சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திரையுலகிற்க்கே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.