Categories: சினிமா

காசெல்லாம் குடிச்சே அழிச்சிட்டேன்.. லட்ச லட்சமா சம்பாதிச்சும் எந்த சந்தோசமும் இல்லை.. நடிகர் விதார்த் உருக்கம்..!

Spread the love

கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் விதார்த், அமலாபால், தம்பி ராமையா மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மைனா. தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததுடன் 58 வது தென்னிந்திய ஃபிலிம் பேர் விருதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் தன்னுடைய அற்புதமான நடிப்பை நடிகர் விதார்த் வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் திரைப்படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது என்று கூறலாம். 2001 முதல் சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் திருவண்ணாமலை திரைப்படத்தின் மூலமாக வில்லன் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து இவர் கதாநாயகனாக மைனா திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

மேலும் இவர் மௌனம் பேசியதே, சண்டக்கோழி, கொக்கி, திருப்பதி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இந்த நிலையில் விதார்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் சந்தித்த பல துயரமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்சதிலிருந்து வந்த காசை நான் குடித்து அழித்துவிட்டேன். அப்போ எங்க அப்பா மன கஷ்டத்தோட எங்க மாமா கிட்ட உட்கார்ந்து அழுதுகிட்டே இருந்தாரு. ஆனா என்கிட்ட எதுவுமே சொல்லல. அவருக்கு காசு போனத பத்தி பிரச்சனை இல்லை நான் குடித்து அதை அழிச்சிட்டேன்னு தான் அவர் ரொம்ப கஷ்டப்பட்டார்.

எங்க அப்பா சமையல் வேலை தான் செஞ்சாரு. முதலில் ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவர் பிறகு கோவிலில் பிரசாதம் செய்து கொடுத்து வந்தார். எனக்கு முதலில் ஒரு 3000 ரூபாய் தான் சம்பளம். ஆனா இப்போ லட்ச கணக்கில் சம்பாதிக்கும் போது கூட அந்த 3000 ரூபாய் வாங்கின சந்தோஷம் இல்ல. எங்க வீட்ல என்னோட காஸ்டியூம் ரொம்ப கம்மியா தான் இருக்கும். நான் சின்ன வயசுல இருந்து கஷ்டத்தை பார்த்ததே இல்லை. ஆனால் சினிமா வாய்ப்புக்காக சென்னை வந்ததுக்கு அப்புறம் கோடம்பாக்கம் பார்க்கல ஆறு மாசமா தங்கியிருந்தேன். பப்ளிக் பாத்ரூம்ல குளிச்சிட்டு அப்படியே சுத்திட்டு இருந்தேன்.

இதெல்லாம் எங்க வீட்ல இருக்கவங்களுக்கு தெரியாது. எங்க அப்பா சிங்கப்பூர்ல இருந்து கொண்டு வந்தா ஒட்டுமொத்த காசையும் நான் குடிச்சு அழிச்சிட்டேன் எங்க அப்பா அழுததால அன்னையிலிருந்து நான் எங்க வீட்ல காசு வாங்கவே இல்ல. ரொம்பவே எனக்கு கஷ்டமா இருந்துச்சு. இப்போ லட்ச லட்சமா சம்பாதிச்சோம் எந்த சந்தோசமும் இல்லை என்று விக்ராந்த் உருக்கமாக பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

“ஒரு நாளுக்கு 8 பிரேக்… வேலையே பார்க்காம ரீல்ஸ் போடுறாங்க…”  60,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு… பழைய இன்ஸ்டா வீடியோக்கள் வைரலானதால் சர்ச்சை… வெடிக்கும் விவாதம்…!!

பிரபல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60,000 ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆட்குறைப்பு செய்ய…

8 minutes ago

“‘தம்பி… இது பிளாட்பாரம்டா…” வண்டியை வழிமறித்து பாடம் புகட்டிய இளைஞர்கள்… காரில் இருந்து சியர் செய்த நபர்… இணையத்தை அதிர வைக்கும் லேட்டஸ்ட் வைரல் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…

16 minutes ago

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

35 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

44 minutes ago