#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. முக்கியமாக சிறகடிக்க ஆசை சீரியலை மக்கள் விரும்பி பார்க்கின்றனர். நடிகர் வெற்றி வசந்த் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் முத்து. இவரை ரசிகர்கள் சின்னத்திரை விஜய் சேதுபதி என செல்லமாக அழைக்கின்றனர்.
இந்த நிலையில் வெற்றி வசந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது எல்லாருக்கும் நன்றி. இதுவரைக்கும் எனக்கு கிடைக்காத பெயரும் புகழும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக கிடைக்கிறது. எனக்கு கொடுக்கும் ஆதரவை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பேஸ்புக்கில் ஆரம்பத்தில் தான் இருந்தேன். அப்போது ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டேன்.
அதன்பிறகு எனது அக்கவுண்டில் இருந்த எனது சில புகைப்படங்களை எடுத்துவிட்டு நான் அந்த அக்கவுண்டை லாக் செய்து விட்டேன். ஆனால் யாரோ ஒருவர் ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்து என்னை போலவே மக்களிடம் பேசி வருகிறார். அது எனது ஒரிஜினல் அக்கவுண்ட் இல்லை. நான் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் இருக்கிறேன். facebook பக்கத்தில் இருந்து எனது பெயரில் சிலரிடம் புகைப்படங்களை அனுப்ப சொல்வதாகவும் நான் கேள்விப்பட்டேன்.
யாரும் அதனை நம்பி ஏமாற வேண்டாம். நான் யாரிடமும் பேஸ்புக்கில் இன்ஸ்டாகிராமில் பேசமாட்டேன். வாட்ஸ் அப்பிலும் பேசுவது எனக்கு பிடிக்காது. தேவைப்பட்டால் கால் செய்து பேசுவேன். நான் பேசுவதாக கூறி சம்பந்தப்பட்ட பேஸ்புக் அக்கவுண்டில் இருந்து மெசேஜ் வந்தால் யாரும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் புகைப்படங்களை அனுப்ப வேண்டாம். எச்சரிக்கையாக இருங்கள் என வீடியோவில் கூறியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான 10 இடங்களுக்குப் பல்வேறு கட்சிகள்…
திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை குறித்து விமர்சன ரீதியான கருத்துக்களை முன்வைத்துள்ளார். காங்கிரஸ்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சென்னை மண்டலத்தில் விஜய் தலைமையிலான தவெக அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னையில் உள்ள 16…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங்குடன் இணைந்து காங்கிரஸ் கட்சி பணியாற்றியதாக வெளியான…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொங்கு சட்டசபை (Hung Assembly) ஏற்பட்டுள்ள சூழலில், அதிமுக-வின் அடுத்தகட்ட நகர்வு…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வேட்பாளர் வி.எஸ். பாபு, முன்னாள் முதலமைச்சர்…