தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி , தற்பொழுது பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் உதய் ராஜ். இவர் 2003-ஆம் ஆண்டு வெளி வந்த ‘ஆயுதம், திருடா திருடி’ போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருந்தார்.இதைத்தொடர்ந்து நடிகர் விஜயுடன் இணைந்து திருமலை படத்தில் நடித்திருந்தார்.
இப்படி படிப்படியாக முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தொடங்கிய இவர் ‘திருமலை’ படத்துக்கு பிறகு, 2010ல் நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்த ‘பாணா காத்தாடி’ திரைப்படத்தில் அதர்வாவின் நண்பராக தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார். இப்படி சிறு கத்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு ஒரு ஜாக்பாட் அடித்தது.
அதுதான் நடிகர் கார்த்தியுடன் ‘கைதி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படி வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான இவரை பலரும் சிறுபையன் என்றே நினைத்துக் கொண்டுள்ளனர்.
அனால் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையே இருக்கிறது. அதோடு மட்டுமின்றி இவரது மனைவியும் ஒரு நடிகையே. இந்நிலையில் தற்பொழுது இரண்டாவது முறையாக நடிகர் உதயாவின் மனைவி கர்பமடைந்துள்ளார். சமீபத்தில் இவருக்கு வளைகாப்பும் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ அவரே தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…