Categories: CINEMA

இன்று 200 கோடி சம்பளம் வாங்கும் தளபதி விஜய்.. முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக அசத்தி கொண்டிருக்கும் நடிகர் விஜய் வாங்கிய முதல் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருக்கின்றது.

தமிழ் சினிமாவில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் திரைப்படங்கள் கட்டாயம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் என்பதால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு இவரது திரைப்படங்களை தயாரிக்கவும், இயக்கவும் முயற்சி செய்வார்கள்.

நடிகர் விஜய் தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சினிமாவில் அறிமுகமானார். அதேபோல்தான் சினிமாவில் கதாநாயகனாக மாறும் வாய்ப்பு இவருக்கு எளிதாகவே கிடைத்துவிட்டது. வாரிசு நடிகர் என்று அடையாளத்துடன் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் நடித்தார் நடிகர் விஜய். ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு மிக மோசமான விமர்சனங்களை கொடுத்தது.

தளபதி விஜய் அதிலிருந்து கடந்து வருவதற்கே பல மாதங்கள் எடுத்துக் கொண்டதாக அவரது தாயார் கூறியிருந்தார். அதன் பிறகு படிப்படியாக முன்னேறி தற்போது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாட கூடிய ஒரு நடிகராக மாறி இருக்கின்றார். நடிகர் விஜய் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஆந்திரா,  கேரளா போன்ற பல மொழிகளில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருக்கின்றார்.

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் விஜய் தேர்தலை சந்திப்பதற்கு முன்பு மக்களுக்கு ஏராளமான உதவிகளையும் செய்து வருகின்றார். மேலும் கோட் திரைப்படத்தின் நடிகர் விஜய் 200 கோடி சம்பளமாக பெற்று இருந்த நிலையில் அடுத்த திரைப்படத்தில், அதாவது அவரின் கடைசி திரைப்படத்தில் 250 கோடி வரை சம்பளம் பெற உள்ளதாக கூறப்படுகின்றது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய் அரசியலில் குதிக்க இருக்கின்றார்.

இந்நிலையில் அவர் முதல் படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்க இருக்கின்றார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது. இவர் தனது தந்தை இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக 1984 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். இதனை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

தன் காதலியை அறிமுகப்படுத்திய விஜய் டிவி முத்தழகு சீரியல் பிரபலம்.. திருமணம் பற்றி கொடுத்த அப்டேட்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் நாயகன் நடிகர் ஆஷிஷ் தனது காதலியை அறிமுகம் செய்திருக்கின்றார். விஜய்…

2 மணி நேரங்கள் ago

காத்திருந்ததுக்கு கிடைத்த பரிசு.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு மோகனுக்கு அடிச்ச அதிர்ஷ்டம்..

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜூ தற்போது புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஒரு…

2 மணி நேரங்கள் ago

விருது வழங்கும் விழாவில் கவர்ச்சி உடையில் கலக்கிய நடிகை அதிதி ராவ்.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை அதிதி ராவ் விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்த நிலையில் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.…

4 மணி நேரங்கள் ago

நான் நினைச்ச மாதிரியே என் பாய் ஃப்ரெண்ட் என்னை ஏமாத்திட்டான்.. மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழ்…

4 மணி நேரங்கள் ago

நடிகை அமலாபாலுக்கு மனிதாபிமானமே இல்ல.. கசப்பான உண்மையை போட்டு உடைத்த பிரபலம் மேக்கப் ஆர்டிஸ்ட்..!

நடிகை அமலாபால் தங்களிடம் மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டதாக பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். தமிழ்…

5 மணி நேரங்கள் ago

கூல் சுரேஷ் பால்வாடி குழந்தைகளுக்கு செய்த உதவி.. இதுல குழந்தை கொடுத்த ரியாக்ஷன் நான் ஹைலைட்டே..!

நடிகர் கூல் சுரேஷ் பால்வாடிக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு சேர் மற்றும் சில பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்த…

6 மணி நேரங்கள் ago