#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி, காமெடியன் என்பதை தாண்டி ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம், சூரியின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து, பாராட்டுகளை குவித்தது. கான்ஸ்டேபிள் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி நடித்திருந்தார் சூரி.
‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், சூரிக்கு அடுத்தடுத்து, ஹீரோவாக நடிக்க வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி படத்திலும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சூரி. இதுதவிர மேலும் சில படங்கள் இவரின் கைவசம் உள்ளது.
ஹீரோவாக நடித்தாலும், தொடர்ந்து காமெடி வேடத்திலும் நடிப்பேன் என கூறியுள்ளார் நடிகர் சூரி. அவர் அவ்வளவு எளிதாக இந்த உயரத்தை எட்டிவிடவில்லை . மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடிய காலத்தில், பல கஷ்டங்களை அனுபவித்தவர்.
அதே போல் பல நேரங்களில் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் கூட, பட வாய்ப்புகள் தேடியவர் சூரி. விடாமுயற்சியோடு தொடர்ந்து வாய்ப்பு தேடிய இவருக்கு ‘வெண்ணிலா கபடிக்குழு’ படம் தான் இவர் வாழ்க்கையே தலைகீழாக மாற்றியது.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கியது. இதன்மூலம் முன்னணி காமெடி நடிகர் என்கிற இடத்தையும், கதையின் நாயகன் என்கிற இடத்தையும் தக்க வைத்து கொண்டுள்ளார் சூரி. இப்படி பல கஷ்டங்களை கடந்து, திரையுலகில் சாதித்தவர் நடிகர் சூரி. மிகவும் எளிமையான இரக்க குணமும் உடையவர்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது தனது குடும்பத்துடன் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடிய வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் படுவைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…