#image_title
அட்லி சல்மான்கான் இணையும் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது.
#image_title
ஏற்கனவே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். அடுத்த அடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ரஜினிகாந்த் தற்போது புதிதாக ஒரு திரைப்படத்தில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் வரை கலக்கி வருகிறார் அட்லி.
இவர் கடைசியாக ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக அட்லி அல்லு அர்ஜுனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருந்ததாக கூறப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்காத நிலையில் தற்போது சல்மான் கான் அந்த திரைப்படத்தில் இணைகின்றார்.
ஏ ஆர் முருகதாஸ் திரைப்படத்தை முடித்தவுடன் அட்லி திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார் சல்மான்கான். அந்த திரைப்படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் பெரிய ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே வைத்து இயக்குவதற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
நடிகர் ரஜினிகாந்த் மட்டும் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் கட்டாயம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்யும் என பலரும் கூறி வருகிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அக்கட்சியின்…
மறைந்த பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடல், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகின் முக்கியத்…
சென்னையில் 6 வயது சிறுவனைப் பெற்ற தாயே ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கப் போதிய பெரும்பான்மை இல்லாத சூழலில், டெல்லி முன்னாள் முதல்வர்…
தமிழக அரசியலில் நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஒரு முக்கிய…
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுப் பட்டியலை சமர்ப்பித்தால் மட்டுமே தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்க முடியும்…