Categories: சினிமா

அன்று ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட சூரிக்கு.. இன்று இத்தனை கோடி சொத்துக்களா..?.

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் கலக்குபவர் தான் சூரி. மதுரையை சேர்ந்த இவருடைய இயற்பெயர் ராமன். ரஜினியின் தீவிர ரசிகரான இவர் தளபதி படத்திற்குப் பிறகு அந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரமான சூர்யா என்பதை தன் பெயராக மாற்றிக் கொண்டார். பிறகு சினிமா ஆசையில் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தார். ஆரம்பத்தில் பட வாய்ப்பு தேடி ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து உள்ளார். ஒரு கட்டத்தில் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்ட இவருக்கு வயிற்று பிழைப்புக்காக சினிமாவில் செட் அமைக்கும் பணி கிடைத்த நிலையில் அதையும் செய்து வந்தார்.

அப்போது சில இயக்குனர்களிடம் சூரி வாய்ப்பு கேட்ட நிலையில் லிங்குசாமி தன் தயாரிக்கும் படங்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கி வந்தார். அதன் பிறகு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்தத் திரைப்படத்தில் பரோட்டா காமெடி மூலம் இவர் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்திற்கு பிறகு பரோட்டா சூரி என்று அடையாளம் இவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விஜய், அஜித் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் காமெடியனாக வலம்.

அந்த சமயத்தில்தான் வெற்றிமாறன் சூரியிடம் கதை சொல்ல சென்ற நிலையில் சூரியை தன் படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க போகிறேன் என்று சொன்னதும் சூரிக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. ஆனால் வெற்றிமாறன் சூடிட்டு முதலில் சொன்ன கதை சில காரணங்களால் டிராப் ஆனது. அதன் பிறகு விடுதலை படத்தின் கதையை சொல்லி சூரியை ஹீரோவாக்கி வெற்றிமாறன் அழகு பார்த்தார். இந்த திரைப்படம் சூரிக்கு சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தின் மூலம் அனைவரும் சூரியை ஹீரோவாக ஏற்றுக் கொண்டனர். இந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து சூரிக்கு ஹீரோவாக நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது.

அதன்படி கொட்டுக்காளி திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்ற நிலையில் அடுத்ததாக கருடன் திரைப்படத்திலும் ஆக்சன் ஹீரோவாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து அடுத்ததாக விடுதலை 2 திரைப்படத்தின் ரிலீஸுக்காக சூரி காத்திருக்கின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் ஏராளமான உணவகங்களை நடத்தி வருகின்றார். அந்த பிசினஸை அவருடைய சகோதரர்கள் கவனித்து வருகின்றனர்.

சினிமா மட்டுமல்லாமல் பிசினஸ் மூலமும் கோடி கோடியாய் சம்பாதித்து வரும் சூரி தற்போது ஒரு படத்தில் நடிக்க 5 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார். மேலும் பிஎம்டபிள்யூ, இனோவா போன்ற சொகுசு கார்களையும் இவர் வைத்துள்ள நிலையில் இவருக்கு தற்போது 70 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஒருவேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்ட இவர் இன்று தன்னுடைய உழைப்பால் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியாக மாறியுள்ளார்.

Nanthini

Recent Posts

திமுக-வின் ‘சீக்ரெட் பிளானுக்கு’ நோ சொன்ன கமல்ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப் போவது யார்?…. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…

29 seconds ago

31 நாட்களாக நீடிக்கும் மர்மம்…. செஞ்சியில் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி… சிக்கப்போகும் அந்த முக்கியப் புள்ளி யார்?…. விசாரணையில் திடீர் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…

5 minutes ago

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு விழுந்த திடீர் முட்டுக்கட்டை…. 2028-க்குப் பிறகே தேர்தல்?…. வெளியான பரபரப்புத் தகவல்….!

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…

12 minutes ago

“கட்சியை மறந்துவிட்டாரா முதல்வர் விஜய்?”…. வெடித்துக் கிளம்பும் தவெக உட்கட்சிப் பூசல்…. ஆட்டம்காணும் ஆட்சி….!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…

17 minutes ago

14 வயது சிறுவனுடன் 19 வயது இளம்பெண் தனிமையில்… நேரில் பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்…. அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி…. தெலுங்கானாவில் பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…

1 மணத்தியாலம் ago

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

1 மணத்தியாலம் ago