முன்னணி காமெடி நடிகர் சூரியின் மனைவியா இவர்?… இணையத்தில் முதன்முறையாக வெளியான ஒரே ஒரு புகைப்படம் இதோ…

By Begam on மாசி 11, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

   

இவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக துணை நடிகராக இருந்து வாய்ப்புகளுக்காக பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.

   

 

படப்பிடிப்பு எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று வாய்ப்புக் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்த சூரி.

தீபாவளி, பீமா, வின்னர் உள்ளிட்ட பல படங்களில் ஓரிரு காட்சிகளில் வந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

‘வெண்ணிலா கபாடிக் குழு’  திரைப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி காட்சியின் மூலம் பிரபலம் அடைந்தார் .

இதனாலேயே அவர் பரோட்டா சூரி என நிறைய இடங்களில் அழைக்கப்பட்டார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் , மனம் கொத்தி பறவை என சிவகார்த்திகேயனுடன் இணைத்து கலக்கினார்.

காமெடி கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகர் சூரி தற்பொழுது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் தேசிய விருது இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ என்ற படம் மூலம் ஹீரோவாக தற்பொழுது நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமானவை தான்.

இவரது காமெடி காட்சிகளுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இன்றளவும் மீம்ஸ்களில் இவரது காமெடி காட்சிகள் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

இவர் நடிப்பில் உருவாகும் விடுதலை திரைப்படத்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

நடிகர் சூரிக்கு திருமணம் முடிந்து வெண்ணிலா மற்றும் சர்வன் என்ற ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்..

நடிகர் சூரி தனது குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவ்வப்பொழுது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆனால் அவரது மனைவியை பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

நடிகர் சூரி தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம்  இணையத்தில் வெளியாகியுள்ளது.