Categories: சினிமா

அம்மாடி!… இத்தனை கோடியா?… புது BMW கார் வாங்கிய நடிகர் சூரி…. விலையை கேட்டா சும்மா அசந்து போயிடுவீங்க…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி, காமெடியன் என்பதை தாண்டி ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம், சூரியின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து, பாராட்டுகளை குவித்தது. கான்ஸ்டேபிள் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி நடித்திருந்தார் சூரி.

‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், சூரிக்கு அடுத்தடுத்து, ஹீரோவாக நடிக்க வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி படத்திலும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சூரி. இதுதவிர மேலும் சில படங்கள் இவரின் கைவசம் உள்ளது.

ஹீரோவாக நடித்தாலும், தொடர்ந்து காமெடி வேடத்திலும் நடிப்பேன் என கூறியுள்ளார் நடிகர் சூரி. அவர் அவ்வளவு எளிதாக இந்த உயரத்தை எட்டிவிடவில்லை . மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடிய காலத்தில், பல கஷ்டங்களை அனுபவித்தவர்.
அதே போல் பல நேரங்களில் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் கூட, பட வாய்ப்புகள் தேடியவர் சூரி. விடாமுயற்சியோடு தொடர்ந்து வாய்ப்பு தேடிய இவருக்கு ‘வெண்ணிலா கபடிக்குழு’ படம் தான் இவர் வாழ்க்கையே தலைகீழாக மாற்றியது.

இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கியது. இதன்மூலம் முன்னணி காமெடி நடிகர் என்கிற இடத்தையும், கதையின் நாயகன் என்கிற இடத்தையும் தக்க வைத்து கொண்டுள்ளார் சூரி. இப்படி பல கஷ்டங்களை கடந்து, திரையுலகில் சாதித்த, நடிகர் சூரி தற்பொழுது விலை உயர்ந்த BMW கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை சுமார் 1.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Begam

Recent Posts

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

8 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

15 minutes ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

27 minutes ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

58 minutes ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

1 மணத்தியாலம் ago